நெப்போலியன் மகனை சும்மா நினைக்காதிங்க.. அந்த விஷயத்துல ஜித்து ஜில்லாடி.. பட்டமே வாங்கியிருக்கார்..!

அம்பானி குடும்பத்தின் திருமணத்திற்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் விஷயமாக நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம்தான் இருந்து வருகிறது.

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகராக இருந்து வந்தவர் ஆவார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கையையும்விட்டு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இருந்தாலும் அவ்வப்போது வந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நெப்போலியன். இவர் அமெரிக்காவுக்கு சென்றதற்கான முக்கியமான காரணமே அவரது மூத்த மகன் தனுஷ்தான்.

நெப்போலியன் மகன்:

தனுஷிற்கு  அரிய வகை Muscular Dystrophy என்கிற நோய் இருந்த காரணத்தினால் அவர் அமெரிக்காவில்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று அமெரிக்கா சென்று விட்டார் நெப்போலியன்.

அமெரிக்காவில் திரையரங்குகளில் துவங்கி சூப்பர் மார்க்கெட் வரை அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று திறனாளிகள் செல்வதற்கும் வருவதற்கும் கட்டுமான அமைப்புகள் இருப்பதால் அங்கு தனுஷ் வாழ்வது எளிது என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

நெப்போலியன் அங்கு ஒரு ஐடி நிறுவனத்தின் துவங்கி நடத்தி வருகிறார். இந்த Muscular Dystrophy நோயைப் பொறுத்தவரை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 18 வயது வரை வாழ்வது அறிவு என்று கூறப்படுகிறது.

மகன் செய்த சாதனை:

இந்த நிலையில் 20 வயதை தாண்டியும் வாழ்ந்து மற்றவர்களுக்கு ஒரு சாதனையாக இருந்து வருகிறார் நெப்போலியனின் மகன் தனுஷ். இந்த நிலையில் நெப்போலியன் மகனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்று மோசமான கேள்விகளை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

இது அவர்களது குடும்பத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று பலரும் யோசிப்பதில்லை. அதை தாண்டி மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தனுஷ் எவ்வளவு திறமைசாலி என்பது பலரும் அறியாத விஷயமாக இருந்து வருகிறது.

Muscular Dystrophy நோயால் பாதிக்கப்பட்டாலும் கூட தனது கல்வியின் மீது அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கிறார் தனுஷ். இவர் ஒரு பட்டதாரி ஆவார் அதுவும் கிடைத்த துறையை படிக்காமல் தனக்கு பிடித்த அனிமேஷன் துறையில் பட்டம் பெற்று இருக்கிறார் தனுஷ்.

அமெரிக்காவில் உள்ள சன்செட் மிடில் ஸ்கூல் என்னும் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு லிப்ஸ்காம் யூனிவர்சிட்டி என்கிற பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகால அனிமேஷன் பட்டப்படிப்பை முடித்தார். அனிமேஷனில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அதில் நிறைய கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனையும் செய்திருக்கிறார் தனுஷ்.

தனது மகன் பட்டப்படிப்பை முடித்தது மட்டுமில்லாமல் அதில் கைதேர்ந்தவராக இருப்பது நெப்போலியனுக்கும் அவரது மனைவி ஜெயசுதாவிற்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version