இந்த பெண்ணை Choose பண்ண இது தான் காரணம்..! மகனின் திடீர் திருமணம்.. உண்மையை உடைத்த நெப்போலியன்..!

கடந்த சில வாரங்களாகவே நெப்போலியனின் மகன் தனுஷ் திருமணம் குறித்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தவர் நடிகர் நெப்போலியன்.

அதற்குப் பிறகு அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார் நெப்போலியன். பிறகு அவரது மூத்த மகனான தனுஷிற்கு உடலில் குறைபாடு இருந்த காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக நாடு நாடாக சென்று வந்தார் நெப்போலியன்.

அமெரிக்காவில் செட்டில்:

இறுதியாக அமெரிக்காவில் தனது மகனுக்கு மருத்துவ வசதி நன்றாக இருப்பதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். 2014 இல் அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன் அங்கேயே ஒரு ஐடி நிறுவனத்தையும் துவங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான் தற்சமயம் திருநெல்வேலியில் அக்ஷயா என்கிற பெண்ணை தன்னுடைய மகனுக்கு நிச்சயம் செய்துள்ளார் நெப்போலியன் இவர்களது நிச்சயதார்த்தம் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நடந்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில் நெப்போலியன் மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்னும் காரணத்தினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் எதற்காக தேடி வந்து நெப்போலியன் திருநெல்வேலியில் ஒரு பெண்ணை எடுத்து தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்கிறார் என்பது பலரது கேள்வியாக இருந்தது.

டோக்கியோவில் திருமணம்:

ஏனெனில் இவர்களது திருமணமே தற்சமயம் ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடக்க இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது பெண் மட்டும் ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் நெப்போலியன் அதற்கு பதில் அளித்து இருந்தார். அதில் நெப்போலியன் கூறும் பொழுது நான் அமெரிக்காவிற்கு சென்று வேண்டுமானால் செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால் எனக்கு வரவேக்கூடிய பெண் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அதனால்தான் எனது மகனுக்கு திருநெல்வேலியில் இருந்து பெண் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். இந்த திருமணம்  டோக்கியோவில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. மேலும் இந்த திருமணம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பலவும் வந்த வண்ணம் இருக்கிறது.

ஏனெனில் நெப்போலியன் மகன் மாற்றுத்திறனாளி என்பதால் அவர்களிடம் அதிக பணம் இருப்பதால்தான் இந்த திருமணம் நடக்கிறது. இல்லை என்றால் அவரது மகனுக்கு திருமணம் நடக்காது என்றெல்லாம் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மகன் திருமணத்தை கிராண்டாக நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார் நடிகர் நெப்போலியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version