தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தெரியாமல் யாருக்கும் இருக்காது. இவரது அசாத்தியமான உயரமும் கட்டுமஸ்தான உடம்பும் சிவப்பு நிறமும் பலரையும் கவர்ந்தது.
திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் நெப்போலியன் சினிமாவை அடுத்து அரசியலில் களம் இறங்கியதை அடுத்து திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.
நடிகர் நெப்போலியன்..
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
இதில் மூத்த மகன் தனுஷ் 4 வயது இருக்கும் போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.
இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஆங்கிலம் மருத்துவத்தை மேற்கொள்வதின் மூலம் உடலை சரி செய்து விடலாம் என்று போராடிய நெப்போலியனுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனை அடித்து திருநெல்வேலியில் இருக்கும் பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் இந்த நோயை படிப்படியாக குணமாக்க முடியும் என்று அறிந்து கொண்டு அங்கேயே சென்று தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
எனினும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து பெரும் அளவு விடுபட முடியவில்லை, அதனால் மற்ற குழந்தைகளைப் போல தனுஷால் செயல்பட முடியவில்லை. மேலும் தனுஷ் தனது விடாமுயற்சியால் தன்னம்பிக்கையோடு தன் வேலைகளை அவனே செய்ய துவங்கினான்.
இதனை அடுத்து தன் மகன் போல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் திருநெல்வேலியில் இதற்காக ஒரு மருத்துவமனையும் கட்டி கொடுத்து தனது மகனின் எதிர்கால கனவை பூர்த்தி செய்ய இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்கு சென்று அங்கு பிசினஸ் செய்து வருகிறார்.
நெப்போலிகளின் மூத்த மகனுக்கு திருமணம்..
இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்கான நிச்சயதார்த்த பத்திரிகையை கூட முதலமைச்சரிடம் நேரடியாக பத்திரிக்கையை கொடுத்து வரவேற்று இருக்கிறார்.
தற்போது நெல்லை சேர்ந்த இவர் இனத்தைச் சேர்ந்த ஏழை வீட்டு பெண்ணைத் தான் மருமகளாக தன் வீட்டுக்கு கொண்டு வரப் போவதாக பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சொல்லி இருக்கிறார்.
பெண்ணு வாழ்க்கையை கெடுக்காதீங்க பிரபலம் பரபரப்பு..
மேலும் அந்தப் பெண்ணுக்கு அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்ட நிலையில் நல்ல அறிவோடு இருக்கும் பெண்ணை பார்த்து மணமுடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஊடகங்களில் பணம் அதிக அளவு உள்ளது என்பதால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என்பது போன்ற பல்வேறு வகையான விஷயங்கள் கசிந்தது. எனினும் அவை உண்மை அல்ல.
திருமணத்திற்கான செலவு மொத்தமும் நெப்போலியன் குடும்பமே செய்ய உள்ள நிலையில் ஒவ்வொரு முறையும் நெப்போலியன் வெளியிடுகின்ற வீடியோக்களையும் அந்த பெண் பார்த்து இருக்கிறார். அதனால் எல்லா விஷயமும் தெரிந்து தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இவர்களது திருமணமானது ஜப்பானில் நடக்க உள்ளதாக சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார் .
இதனை அடுத்து ஏழை வீட்டில் பெண் எடுத்தால் தன் மகனை சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் நெப்போலியன் இந்த செயலை செய்து இருக்கிறார் என்று ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தார்.
மேலும் இந்த விஷயமானது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருவதோடு நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் நெப்போலியன் இந்த முடிவெடுத்திருக்கிறாரே ஒழிய ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சீரழிக்க அல்ல என்பதை ரசிகர்கள் பலரும் உணர்ந்து கொள்ளும் படி பத்திரிக்கையாளரின் பேச்சு இருந்தது.