வேற பொண்ணு கதறுனதை பாத்துட்டு.. என்னை புடிச்சு குத்திட்டாங்க.. ராதிகா குறித்து நடிகை நிரோஷா..!

1980 மற்றும் 1990களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், தமிழ் என்று எக்கச்சக்கமான மொழிகளில் இந்தியா முழுவதும் பல படங்களில் நடித்திருக்கிறார் ராதிகா.

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் ராதிகாவும் ஒருவர். பெரும்பாலும் பாரதிராஜா அறிமுகப்படுத்தும் நடிகைகள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைதான் பெற்றெருக்கின்றனர்.

அந்த வகையில் ராதிகாவும் கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ளார். 1978ல் வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராதிகா. இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

வரவேற்பை பெற்ற ராதிகா:

முதல் திரைப்படத்திலேயே விருது பெற்ற நடிகையாக இருந்ததால் தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அப்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார் ராதிகா எம்.ஆர் ராதாவின் மகளாக இருந்தாலுமே கூட தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாக மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றார் ராதிகா.

பல திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்ற பிறகு ராதிகா ஒரு கட்டத்திற்கு பிறகு சின்னத்திரைக்கு மாறினார். சின்னத்திரையில் அவர் நடித்த சித்தி அண்ணாமலை முதலிய நாடகங்கள் அதிகமான வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து வெள்ளி திரையை விட சின்னத்திரையில் அதிக வரவேற்புகள் கிடைத்ததை பார்த்த ராதிகா அடுத்து சின்ன திரையில் கவனம் செலுத்த துவங்கினார். இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார் ராதிகா.

ராதிகா குடும்பம்:

ராதிகா தற்சமயம் தன்னுடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து கட்சி பணிகளில் இறங்கி இருக்கிறார். ராதிகாவின் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம் என்று கூறலாம். ஏனெனில் அவரின் தந்தை எம் ஆர் ராதாவிற்கு நிறைய மனைவிகள் என்பது பலரும் அறிந்த விஷயமாகும்.

எனவே ராதிகாவிற்கு சகோதர சகோதரிகள் அதிகம் அந்த வகையில் நடிகை நிரோஷா ராதிகாவின் தங்கை ஆவார். சிறு வயது முதலே நீரோஷாவும் ராதிகாவும் ஒன்றாக தான் பழகி வந்தனர். இந்த நிலையில் ஒருமுறை காதுகுத்த சென்ற நிகழ்வு குறித்து நீரோஷா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நானும் ராதிகாக்காவும் காது குத்துவதற்காக ஒரு கடைக்கு சென்றிருந்தோம். அப்போதெல்லாம் காது குத்தும் மிஷின் எதுவும் வரவில்லை. அதற்கென்று வைத்திருக்கும் திருகை வைத்து தான் காது குத்துவார்கள்.

அப்பொழுது நான் சென்றபோதே ஒரு குழந்தைக்கு காது குத்தி கொண்டிருந்தார்கள். அதை பார்த்ததுமே எனக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் எனது அக்கா என்னை அழைத்துச் சென்று அங்கே காது குத்த வைத்து விட்டார்.

ஆனால் எனக்கு காது குத்துவதை பார்த்தவுடன் அவருக்கு பயம் வந்துவிட்டது எனவே ராதிகா மட்டும் காதுகுத்திக் கொள்ளாமலேயே வீட்டிற்கு வந்து விட்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருந்தார் நிரோஷா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version