வணங்கானுக்கு இனி சூரியா லாயக்கில்லை வேறு ஹீரோவை போட இருக்கும் பாலா… யார் அந்த ஹீரோ தெரியுமா?

 தற்போது இணையத்தில் மிக அதிக அளவு பேசும் பொருளாக இருப்பது வணங்கான் படத்திலிருந்து வெளியேறி இருக்கும் சூரியா பற்றிய  பேச்சு தான். இதற்கான அறிவிப்பை தற்போது இயக்குனர் பாலாவை அறிவித்து விட்டதால் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது.

வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பாலாவுக்கு இடையே சில வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நிலையில் சூரியா தனது சமூக வலைத்தள பக்கங்களில் விரைவில் வணங்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி  நிறுவனம் மற்றும் சூரியா தயாரிக்க இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து  விலகி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து பாலாவின் அறிக்கைப்படி வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சீக்கிரமே துவங்கும் என்று கூறிய நிலையில் தற்போது சூர்யா இடத்தில் எந்த நடிகர் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பை தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 எனவே அந்த ஹீரோ யார் என்பதற்கான வேலையில் தற்போது பாலா இறங்கி இருக்கிறார். மேலும் படத்தில் விஷால் அல்லது ஆர்யாவை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

 ஏற்கனவே இந்த இரண்டு ஹீரோக்களும் பாலாவின்  படத்தில் நடித்தவர்கள். இருவருமே அவன் இவன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆர்யா நான் கடவுள் என்ற படத்தில் பாலாவுடன் பாலாவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

 இந்த சூழ்நிலையில் இவர்களால் சூர்யாவின் திறமைக்கு ஏற்ப இந்த படத்தில் நடிக்க முடியுமா என்ற கேள்விக்குறி இப்போது எழுந்திருப்பதால் பாலா துணிச்சலாக வணங்கான் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறுவதற்கு ஆர்யா தான் காரணம் என்று பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

 எனவே சூர்யா இடத்தில் ஆர்யாவை போட்டு பாலா படத்தை முடித்து விடுவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் தற்போது தெரியவந்துள்ள நிலையில் இதற்கான தகுதியான நபர் யார்  என்பதும் யார் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்கள் என்ற விபரங்கள் விரைவில் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …