பெண்களுக்கு அதிக வட்டி தரும் அரசு திட்டம்..! – இன்றே தொடங்குங்கள்..!

அதிக வட்டி : வங்கிகளில் பெண்களுக்காக பல திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மகளிருக்கு என மகளிர் கௌரவ சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்கள் முதலீடு செய்வதின் மூலம் 7.5% சதவீத வட்டியை ( 7.5% Interest ) பெற முடியும்.காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும்.

இந்தத் திட்டமானது மத்திய நிதி அமைச்சரகம் அண்மையில் அறிவித்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் சக்தியாக மட்டுமல்லாமல் வீட்டின் சக்தியாக விளங்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த சிறுசேமிப்பு திட்டம் மகளிருக்கு நல்ல வகையில் பயன் அளிக்கும் வகையில் உள்ளது.

mahila-savings-scheme

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் உங்களுக்கான முதலீட்டை நீங்கள் செய்யலாம். வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே இந்த திட்டமானது அமுலில் இருக்கும்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 10 நாட்களில் சென்னை நகரப் பிராந்தியத்தில் மட்டும் 840 கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.11.72 கோடி டெபாசிட் தொகை சேர்ந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் இந்தத் திட்டத்தில் அனைத்து பெண்களும் சேரலாம். பெண் குழந்தைகள் சார்பாக அவர்களது பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க முடியும்.

mahila-savings-scheme

இந்தத் திட்டத்திற்கான வட்டியை நீங்கள் காலாண்டு தோறும் உங்கள் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக 1000 ரூபாய் வரை இந்த கணக்கை ஆரம்பிக்க முடியும்.மேலும் அதிக பட்சம் வரை இரண்டு லட்சம் ரூபாய் வரை நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

மேலும் விருப்பமான ஒரு தவணையை டெபாசிட் செய்வது அவசியமாகும். கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கணக்கு முதிர்வுக்கு வந்துவிடும். கணக்குத் தொடங்கி ஆறு மாதம் கடந்த பின் அவசரமாக பண தேவை ஏற்பட்டால் முன்கூட்டியே உங்கள் கணக்கை முடித்துக் கொள்ளக்கூடிய அமைப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

mahila-savings-scheme

எனவே மிக அருமையான இந்த மகளிர் கௌரவத் திட்டத்தின் கீழ் நீங்கள் உங்கள் கணக்கினை துவங்கி நல்ல லாபத்தை பார்க்கலாம்.

எனவே இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாமல் நீங்கள் உங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று உங்கள் கணக்கை உடனே ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1917707

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …