ஜிமெயில் யூசரில் தெரிய வேண்டியவை

தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஜி மெய்லை பயன்படுத்தி வருபவர்களில் எண்ணிக்கை நாளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் ஜிமெயில் செயலியில் நாம் பயன்படுத்தும் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

அட்வான்ஸ்ட் சேர்ச்

Gmail இன் அட்வான்ஸ்டு சேர்ச் ஆப்ஷன், சேர்ச் அளவை குறைத்து, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவிகிறது. குறிப்பாக ஓரு நபரின் மெயிலை கண்டறிய, சேர்ச் பாக்ஸில் மெயிலை ஐடியை டைப் செய்து, மொத்த மெயிலில் உட்கார்ந்து தேட வேண்டும். ஆனால் இந்த அட்வான்ஸ்ட் சேர்ச் ஆப்ஷனில் சைஸ், தேதி, அட்டாச்மென்ட் இருக்கும் மெயில் ஆர் இல்லாத மெயில் என வகைப்படுத்தும் போது, எளியாக கண்டறியலாம்.

அன்டு சென்டு

இது ஜிமெயில் நீங்கள் அனுப்பிய மெயிலில் எதேனும் தவறு இருப்பதை கண்டறிந்தால், அதனை அனுப்பாமல் கேன்சல் செய்யும் வசதி தான் . 

மெயலில் Send பட்டன் கிளிக் செய்ததும், திரைக்கு கீழே Undo send பட்டன் தோன்றக்கூடும்.  அந்த பட்டன் திரையில் எவ்வளவு நேரம் இருக்கவேண்டும் என்பதை நீங்களே settingsஇல் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மெயில் அனுப்பியதும், ஏதெனும் தவறு என கண்டறிந்தால் உடனே Undo பட்டன் கிளிக் செய்யுங்கள். அந்த மெயில் ரிட்டன் ஆகிவிடும்.

எழுதுவதற்கான பரிந்துரை

ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் அல்லது ரைட்டிங் பரிந்துரை வசதி மூலம், விரைவாக டைப் செய்திட சில பொதுவான வாக்கிய பரிந்துரை திரையில் தோன்றும். Gmail Settingsஇல் Smart Compose ஆன் செய்துவிட்டால், டைப் செய்கையில் பரிந்துரைகளை காண முடியும்.

மியூட் பண்ண

தேவையில்லாமல் உங்களுக்கு வரும் மெயில்களை மியூட் செய்ய முடியும். மெயிலை சேலக்ட் செய்துவிட்டு, இன்பாக்ஸ் பாரில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்தால், மியூட் பட்டனை காண முடியும். இதனை பயன்படுத்தி மியூட் செய்யலாம்.

டேப் லேஆவுட்டில் மாற்றம்

ஜிமெயிலில் social and promotional ரீதியான மெயில்கள் தனி செக்ஷனில் இருக்கும். அவை personal and office மெயில்களுடன் இணைந்துவிடக்கூடாது என்பதற்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் விரும்பினால் டேப்களை மாற்றியமைக்கலாம். Gmail Settingsஇல் Inboxக்கு சென்று Categories-ஐ மாற்றிக்கொள்ளாம். எந்த டேப் ஜிமெயில் வந்ததும் தெரியவேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …