இளைஞர்களை சுண்டி ஈர்க்கும் எஃப் 850 பிஎஸ் மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் வண்டிகள்

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்குகள் குறித்த கூடுதல் விபரங்களை இனி காணலாம்.

தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு வண்டிகள் இளைஞர்களின் நெஞ்சை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஃப் 850 பிஎஸ்  மற்றும் எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் வண்டிகளுக்கான அறிமுகத்தைத் தொடர்ந்து வண்டிகளை புக் செய்வதற்கு ஆன்லைனில் புக்கிங் காண சர்வீசை துவங்கியுள்ளது.

இரு மோட்டார்சைக்கிள் மாடல்களையும் பிஎம்டபிள்யூ சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் களமிறக்கியிருக்க, அதன் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த எஃப் 850 ஜிஎஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 12.5 லட்சமும், எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோவிற்கு ரூ. 13.5 லட்சமும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதம் முதல் இந்த வண்டிகள் கிடைக்கும் என தெரிகிறது.

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மூன்று ஆண்டுகள், கெடு இல்லாத கிமீ வாரண்டியை பிஎம்டபிள்யூ மோட்டாராட் அறிவித்திருக்கின்றது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் வாரண்டியை நான்கு மற்றும் ஐந்தாண்டுகள் என நீட்டித்துக் கொள்ளும் வசதியையும் நிறுவனம் வழங்குகின்றது.

மேலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மாடலாக எஃப் 850 ஜிஎஸ் அட்வென்சர் ப்ரோ காட்சியளிக்கின்றது. இது நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற டூ-வீலர் ஆகும். இதற்கேற்ப பன்முக வசதிகளை இப்பைக்கில் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வழங்கியிருக்கின்றது. டிஎஃப்டி திரை, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், ஏபிஎஸ் ப்ரோ மற்றும் டிடிசி ஆகிய அம்சங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் லைட் ஒயிட் மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் ரேசிங் ரெட் ஆகிய வண்ண தேர்வுகளில் இந்த பிஎம்டபிள்யூ பைக் விற்பனைக்குக் கிடைக்கும். கார்களில் இருப்பதைபோல் பைக்குகளுக்கான அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கையை பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

தேவைக்கேற்ப இருக்கையின் அளவை விரிவு செய்த பின்னர், அந்த அளவை நிலையானதாக மாற்ற லாக் செய்யும் வசதியும் வழங்கப்படுகின்றது. ஆகையால், இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் ஆர்வம் அதிகம் ரைடர்களுக்கு அதிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …