அடுத்த 10 வருஷத்தில் நிலைமை இதுதான்.

யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது. ‘வாகனம் ஓட்டுநர் உரிமம்’ என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. 

ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்றால்.. உங்கள் அலைபேசி யில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்லை எனில் குறுஞ்செய்தி…! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்கள் முன் தானாக ஒரு கார் வந்து நிற்கும். 

நீங்க போகவேண்டிய இடத்திற்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுவிடும். கிலோமீட்டருக்கு இவ்வளவு வெள்ளியோ அதை நீங்க  கொடுத்தால் போதும். பொருட்கள் அனுப்புவதும் முன்னை விட இனி சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால் என்னவாகும் என்றால் …அடிக்கடி தேவையில்லாமல் வாகன நிறுத்துமிடத்தில் தூங்கும் 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமாக ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர் என்று ஒருத்தரும் இருக்கமாட்டான்.  

சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். ‘விபத்து’ குறைந்து போய்டும். நகரில் ‘வாகன நிறுத்துவதற்காக’ மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார்  வாகனங்களின் விற்பனை 90% கும் கீழே போய்விடும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

டேஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் இக் கட்டுபாட்டில் தான் இனி டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும்.

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது இனி கூகுள்தான்.

எல்லாம் இனி மின்சாரத்தில் தான் ஓடும். மூப்பது வருஷத்தில் 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்தில் 25% மேல் மின்சார தேவையை இதுதான் பூர்த்தி செய்யும்.

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா ‘வங்கி’ எனப்படும் வங்கி சேவைகள். ‘பிட் காயின்’ (bit Coin) என்ற ஒன்றை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லை என்றால் கூகுளை கேளுங்கள்…! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்தில் உலக நாணயம் இப்படி ஏதாவது ஒண்ணு தான் என்று.

அப்புறம், ‘காப்பீடு’ எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமாக செம்மய அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். நகருக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே பசுமை வீடு (Green House) வைத்து காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*

 

‘Moodies’ங்கற ஒரு செயலி, இப்பவே உங்க முகத்தை ஊடுருவி  உங்க மன நிலை என்ன என்று சொல்லும்… 2022 ல் நீங்கள் பொய் சொல்றீங்களா? இல்லையா? உண்மையை சொல்றீங்களா என்று அச்சு பிசகாமல் சொல்லிடும். யாராலயும் ஏமாற்ற முடியாது.*

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் அலைக்சா (Alexa) வும், சிரி (Siri) யும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிக் கொண்டேபோகிறது. . 2036 ல் மனிதர்கள் நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல் வாழ்வார்கள்.

டிரைகோடர் x (Tricorder X)  என்று ஒன்று அடுத்த வருஷம் சந்தைக்கு வர உள்ளது. உங்கள் அலைபேசியில் உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும். இது, உங்க கண்ணை ஊடுறுவி படம் எடுக்கும் . உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காற்றை அலசும். உங்க உடம்பில் என்ன வியாதி, எந்த மூலையில் எந்த நிலைமையாக இருந்தாலும் சொல்லிவிடும். அப்புறம் என்ன 2035ல் 100 வருஷம் வாழவதெல்லாம் ஜுஜுபி. மருத்துவர்கள்  மருத்துவ மனை வைக்கத் தேவையில்லை, இணைய வழியாக ஒரு வெளி நோயாளிக்கு மருத்துவம் பாக்க முடியும். உள் நோயாளிகளுக்கு தான் மருத்துவ மனை தேவை .

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும். இது உண்மை.

சந்திக்க தயாராவோம்.எதிர்காலம்  நம் கைகளில் இல்லை. இன்று மட்டுமே  நமக்கு சொந்தம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …