அழகிய லைலா… புல்லிங்கோ மனச கொத்தா இழுக்கும் நிகிலா விமல்!

கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்த வளர்ந்தவரான நடிகை நிகிலா விமல் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலமாக இவர் பிரபலமான நடிகையாகவும் ராசியான நடிகையாகவும் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார் .

நடிகை நிகிலா விமல்:

முதன் முதலில் திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் கேரளாவில் தொலைக்காட்சி ஒன்றிய தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு நடிகையானார்.

இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, கேரளா நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுத் தெரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நிகிலா விமல் முதன் முதலில் 2009 ஆம் ஆண்டில் பாக்கியத் தேவதா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த திரையுலகத்திற்கு அறிமுகமாகினார்.

அதை அடுத்து தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் .

தமிழ் படங்களில் நிகிலா விமல்:

இந்த திரைப்படத்தில் லதா என்ற கேரக்டரில் நிகிலா விமல் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடித்திருந்தார் .

அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் பவ்யமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருந்தார் நடிகை நிகிலா விமல்.

முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தாக நிகிலா விமல் தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

வெற்றிவேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கிடாரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பிறகு கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த தம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பல திரைப்படங்களுக்கு இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார் .

பல நடிகைகளுக்கு டப்பிங் பேசுவது குறித்து பேட்டி ஒன்றில் கேட்டதற்கு நான் டப்பிங் பேசுவதை ஒரு பேஷனாக செய்து வருகிறேன் .

இதற்காக நான் காசு வாங்க மாட்டேன். கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹீரோயினுக்கு நான்தான் டப் செய்தேன் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் .

சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தின் நடிகை நிகில் விமல் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அழகிய லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

இதனால் நடிகை நிகிலா விமலுக்கு இதுவும் வெற்றி படமாக அமைந்து விட்டது. இப்படம் ரசிகர்களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் பூங்கொடி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை நிகிலா விமல் நடித்திருக்கிறார்.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்த குருவாயூரம்பலநடையில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் அழகிய லைலா என்ற பாடலுக்கு நிகிலா விமலின் காட்சி ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்திழுத்தது.

இந்த நிலையில் தற்போது நடிகை நக்கில் ஆவிகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தன சமூக வலைத்தளங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகிய லைலா என்றும் பூங்கொடி டீச்சர் என்றும் கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version