இதை பாத்தா அழகிய லைலாவை மறந்துடுவீங்க.. நிகிலா விமல் செய்த சம்பவம்..!

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்து தற்சமயம் தமிழிலும் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை நிகிலா விமல். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர். 2009 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார்.

அதற்கு பிறகு நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் வரவேற்பை பெரும் வகையில் வெற்றிவேல் திரைப்படத்தில் அறிமுகமானார் நிகிதா விமல்.

வெற்றிவேல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் கிடாரி, பஞ்சு மிட்டாய், போர் தொழில் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார், இதில் கிடாரி, போர் தொழில் திரைப்படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

நிகிலா விமல்

ஆனாலும் மலையாளத்தில் தமிழை விட இவருக்கு வரவேற்புகள் அதிகமாக கிடைத்து வருகின்றன. சமீபத்தில் மலையாளத்தில் நிகிலா விமல் நடிப்பில் குருவாயூர் அம்பலநடையில் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் பேஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதைகளமே மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது பிரித்விராஜின் தங்கையை பேசில் ஜோசப் திருமணம் செய்வதாக கதை இருக்கும். ஆனால் அவருக்கு இருந்த பழைய காதல் ஒன்று தொடர்ந்து திருமணத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி வரும்.

வாழை திரைப்படம்:

அந்த காதலில் இருந்து பிரிதிவிராஜ்தான் வெளியில் கொண்டு வந்திருப்பார் ஆனால் பேசில் ஜோசப்பின் அந்த பழைய காதலி பிரித்விராஜின் மனைவிதான் என்பதே பிரித்திவிராஜ்க்கு தெரியாது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இது தொடர்பான டிவிஸ்டான காட்சிகள் வெளிவரும் பொழுது அழகிய லைலா பாடலை போட்டு அந்த காட்சிகளை கொண்டு சென்றிருப்பார்கள்.

அதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது மேலும் அந்த பாடலை ரீமேக் செய்து அசத்தலாக அந்த படத்தில் பயன்படுத்தி இருந்தனர். இதுவரை தமிழ் சினிமாவில் நடித்து கிடைக்காத ஒரு வரவேற்பு அந்த பாடலின் மூலமாக எக்கச்சக்கமாக கிடைத்தது.

அழகிய லைலாவை மறந்துடுவீங்க

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தில் பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தில் நிகிலா விமல் நடித்திருக்கிறார். இது படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது பால்ய வயதில் டீச்சர் மீது ஏற்பட்ட குழந்தைத்தனமான காதல் அனைவருக்கும் கண் முன்னால் வந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த வாழை படத்தில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு செமையான ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் நடிகை நிகிலா விமல். எனவே இந்த படம் வெளியான பிறகு அனைவரும் அழகிய லைலா பாட்டை ஓரம் கட்டி விட்டு இந்த பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலைதான் நினைவில் வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version