“நீங்களும் அப்படி தானே நெனச்சீங்க..” – கணவருடன் நெருக்கமாக நடிகை நிக்கி கல்ராணி..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை நிக்கி கல்ராணி தனது கணவர் நடிகர் ஆதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் விவேக் பேசும் வசனமான நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க என்று மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

அதனைத் தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவாகெட்டசிவா, மரகத நாணயம் மற்றும் சமீபத்தில் வெளியான ராஜவம்சம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மரகதநாணயம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி சமீபத்தில் தன்னுடைய நூறாவது ஹனிமூன் கொண்டாடும் விதமாக வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் நிக்கி கல்ராணியின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க என்று கலாய் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …