படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. தோழிகளிடம் கேட்டு கடுப்பான கண்ணான கண்ணே நிமேஷிகா..!

சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு மிகப் பிரபலம். அத்தோடு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து விடும். அந்த வகையில் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்த நிமேஷிகா பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம்.

இவர் தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இதனை அடுத்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

நடிகை நிமேஷிகா..

நடிகை நிமேஷிகா பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் சினிமாவில் கொண்ட ஆர்வத்தின் காரணத்தால் கோயமுத்தூரில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்து டிக் டாக் செயலியின் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்.

இதையும் படிங்க: ஒரு பக்க மார்பின் மீது தங்கத்தில் செய்த பெரிய பூ.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் ஜெர்க் ஆக வைத்த தமன்னா..!

இதனை அடுத்து விஜய் டிவியில் அசீம் ஹீரோவாக நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நீலாம்பரி என்ற கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக இவருக்கு பெயரை பெற்று தரவில்லை.

இதனை அடுத்து தான் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தமிழகம் எங்கும் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார்.

சமீப காலமாக சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி பல நடிகைகள் ஓப்பனாக அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

பட வாய்ப்புக்கு படுக்கைக்கு கூப்பிட்டாங்க..

அந்த வகையில் தற்போது இவருக்கு நடந்த காஸ்டங் கவுச் பிரச்சனை பற்றி அண்மை பேட்டியில் மனம் திறந்து பேசி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். அதுவும் பெரிய திரை போல சின்னத்திரையிலும் இந்த பிரச்சனை உள்ளதா? என்று தனக்குத் தெரியாது.

ஆனால் சினிமா மற்றும் வெப் சீரியல் துறைகளில் இந்த பிரச்சனை அதிக அளவு காணப்படுவது மிக நன்றாக தெரியும். ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று முதலில் சொன்ன போது எனக்கு புரியவில்லை.

தோழிகளிடம் கேட்டு கடுப்பான நிமேஷிகா..

இதனை அடுத்து இதைப் பற்றி உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள் என்று நாசுக்காக சொன்னதை அடுத்து நான் எனது நண்பர்களிடம் காஸ்டிங் கவுச் என்றால் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன்.

இதனை அடுத்து எனக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டதோடு திறமைக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்த பின் எனக்கு அப்படி செய்து தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று உதறி விட்டேன்.

இப்படி கூறிய விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா வாய்ப்புக்காக இவரை படுக்கைக்கு பூடகமாக அழைத்த விதத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் இது பற்றி தைரியமாக ஓப்பனாக பேசிய கண்ணான கண்ணே சீரியல் நாயகியை பாராட்டி வருவதோடு, எப்போதும் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும் அதை விடுத்து இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு தலை ஆட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால் கட்டாயம் மாற்றம் ஏற்படும்.

இதையும் படிங்க: அடுத்த புருஷன் யாரு..? கேள்விக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த வேற லெவல் பதில்..!

இதனை உணர்ந்தாவது இளம் நடிகைகள் இதற்கு செவி சாய்க்காமல் திறமையை மட்டும் நம்பி திரையுலகுக்குள் அடி எடுத்து வைத்தால் நிலைமை மாறும் என்று ரசிகர்கள் ஒரு மித்த குரலில் பேசி வருகிறார்கள்.

இது சாத்தியமா? இல்லையா? என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும். எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளை ஞாபகப்படுத்தி, அவரவர் கையில் தான் அது உள்ளது என்பதை சிம்பாலிக்காக உணர்த்திவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam