1971-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி பிறந்த நடிகையின் நிரோஷா எம் ஆர் ராதாவின் மகளாவார். இவரின் அக்கா தான் நடிகை ராதிகா. மேலும் இவருக்கு ராதாரவி, எம் ஆர் ஆர் வாசு, ரசிகா ராணி, ரதிகலா, மோகன் ராதா போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள்.
நடிப்பில் பட்டையை கிளப்பி நடிகவேள் என்ற பெயரை பெற்றிருக்கும் எம் ஆர் ராதாவின் மகளாகிய நடிகை நிரோஷா ஒரு வாரிசு நடிகையாக அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிடத்திற்கு அறிமுகமானார்.
நடிகை நிரோஷா..
நடிகை நிரோஷா 1988 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனதை அடுத்து அதே ஆண்டு செந்தூரப்பூவே, சூரசம்காரம், பட்டிக்காட்டு தம்பி போன்ற மூன்று படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தியவர்.
இதனை அடுத்து 1989-ஆம் ஆண்டு என் கணவர், கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும், பாண்டிய நாட்டு தங்கம் என ஒரே ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பெருத்த வரவேற்பை பெற்றார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த நிலையில் 1990-இல் இணைந்த கைகள் படத்தில் நடித்ததை எடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் பெற்ற இவர் பறவைகள் பலவிதம், மருதுபாண்டி, காவலுக்கு கெட்டிக்காரன், மைந்தன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து இவர் பாரம்பரியம், சிலம்பாட்டம், படிக்காதவன், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்ததை அடுத்து திரை உலகமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
என் உலகமே அதுதாங்க.. இதுக்குத்தான் சினிமாவே வேண்டான்னு..
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிவு கவிபாடும் என்பது போல எம்.ஆர். ராதாவிற்கு பிறந்த பிள்ளைகளுக்கு பல்வேறு வகைகளில் ஜொலித்து வந்த காலத்தில் இவரும் நடிகை ராதிகாவை போலவே பெரிய திரை மட்டுமல்லாமல் திரையிலும் நடித்து அசத்தியவர்.
அந்த வகையில் இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 1, 2, 4 தாமரை சந்திரகுமாரி போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததை அடுத்து பீக்கில் இருந்த சமயத்தில் சினிமாவை விட்டு விலகியதற்கான விஷயத்தைச் சொல்லி அனைவரையும் ஆச்சிரியத்தில் திட்டினார்.
இவருக்கும் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக திகழ்ந்த ராம்கிக்கும் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து தன் கணவன் தான் தன் உலகம் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திரை உலகை விட்டு விலகியதாக கூறியிருக்கிறார்.
நடிகை நிரோஷா ஓப்பன் டாக்!
மேலும் அந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு தன் கணவரை உலகம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் வீட்டை கவனித்துக் கொள்ள வேண்டும். பிள்ளை குட்டி என்று செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக சொல்லி இருக்கிறார்.
மேலும் புரொடெக்ஷன் சைடில் தனது கவனத்தை செலுத்தி இருந்த காரணத்தால் முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இது உதவும் என்று நினைத்ததாகவும் அந்த பேட்டியில் சொல்லி அசத்தினார்.
இதனை அடுத்து நடிகைகள் தன் கணவரையே உலகமாக நினைத்து வாழும் நிரோஷாவின் பேச்சானது தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி ராம்கி மற்றும் நிரோஷாவின் அன்பை அனைவரும் புரிந்துகொண்டு வாழ்த்தி வருகிறார்கள்.