அட …வொண்டர் வுமன் – னில் ஹிந்திக்கு எதிராக நித்யா மேனன் மற்றும் பார்வதி களம் இறங்கி இருக்கிறார்களா? விவரம்…!!

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வொண்டர் வுமன் இந்த திரைப்படத்தில் ஹிந்தி திணிப்பு பற்றிய காட்சிகள் உள்ளதால் இது பெரும் அளவு பேசப்பட்டு வருகிறது.

 மேலும் இந்த படத்தில் ஹிந்தியை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதத்தில் கதைக்களத்தை அமைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியை ஒரு தேசிய மொழியாகி இதனை கற்று கொள்வது அவசியம் என்பது போல கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.

 ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு பலத்தை எதிர்ப்புகள் கிளம்பியுள்ள வேளையில் இன்னும் பள்ளிகளில் ஹிந்தியை ஒரு மொழியாக அங்கீகாரம் தந்து அரசு பள்ளிகளில் அதனை செயல்படுத்தவில்லை.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி உள்ள இந்த படம் ஹிந்தியில் முக்கியத்துவத்தை கூறியுள்ளது .ஏற்கனவே மலையாள பள்ளிகளில் ஹிந்தியை இரண்டாவது மொழிப்பாடமாக வைத்துள்ள நிலையில் மீண்டும் ஹிந்திக்கு ஆதரவு தருவது போல இந்த படத்தின் கதை இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இந்த படத்தில் ஹிந்திக்கு எதிராக நித்யா மேனன் களம் இறங்கி இருக்கிறாரா என்று கேட்கும்படியான காட்சிகள் அமைந்துள்ளது.

 இந்தப் படத்தில் ஒரு பெண் ஹிந்தி தெரியாது என்று கூறும் போது நீங்கள் உங்களுடைய தேசிய மொழியை உங்களுக்கு தெரியாதா என்று மற்றொரு பெண் கேள்வி எழுப்பி இருக்கிறார்.அது மட்டுமல்லாமல் எனக்கு மதராசி தெரியும் என்று ஒரு பெண் அதை வைத்து சமாளித்துக் கொள்வேன் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மதராசி என்பது ஒரு மொழியை அல்ல தமிழ் என்பதுதான் அந்த மொழி என நித்யா மேனன் விளக்கி இருக்கிறார். மேலும் தென்னிந்தியாவை பொறுத்த வரை தமிழ் மட்டுமல்ல மலையாளம் கன்னடம் என பல தென்னிந்திய மொழிகள் உள்ளது என்பதை அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

 இதனை அடுத்து அந்தப் பெண் ஹிந்தியை பற்றி கேட்கும் போது தென் மாநிலங்கள் அனைத்துமே இந்தியாவில் தானே இருக்கிறது என்ற உண்மையை உணரும்படி நித்யா மேனன் விளக்கமாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில்  தள்ளியுள்ளது.

மேலும் ஒரு சில பேர் நித்தியாமேனன் மற்றும் பார்வதி ஹிந்திக்கு எதிராக செயல்படுகிறார்களா? என்று நக்கலாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஹிந்தி இந்தியாவில் பேசப்படக்கூடிய மொழி. இது ஒரு அபிசியல் லாங்குவேஜ் ஆக இருந்தாலும் பெரும்பாலும் ஆங்கிலம் தான் அனைவரும் அறிந்த அபிசியல் லாங்குவேஜ் ஆக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam