இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..

மலையாள நடிகைகள் என்றாலே மப்பும் மந்தாரமுமான அழகில்தான் காணப்படுவர். அழகில் சிறந்த அளவுக்கு அவர்களிடம் நிறைய திறமைகளும் காணப்படுவர். சிறந்த நடிப்பை அவர்களால் மிக எளிதாக வெளிப்படுத்த முடியும்.

மலையாள திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற காரணம், அவர்களது கதை, திரைக்கதை, படத்தின் வசனங்கள், டைரக்ஷன் ஆகியவை மட்டுமின்றி படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளில் தனித்துவமான மிக எதார்த்தான நடிப்பும்தான்.

கதையை நம்பாமல்

அந்த வகையில்தான் சமீபத்தில் வெளியான மலையாள படங்களான பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன.

ஆனால் நம் தமிழ் சினிமாவில் கதையை நம்பாமல், ஹீரோக்களை நம்பி படம் எடுக்கின்றனர். கவர்ச்சியை நம்பி படம் எடுக்கின்றனர். டைரக்டரை நம்பி படம் தயாரிக்கின்றனர். இதுதான் தமிழ் சினிமாவின் மோசமான போக்குக்கு முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி மலையாள படங்களில் கதைக்கு தான் முக்கியத்துவமே தவிர, நடிகர், நடிகைகளுக்கு அல்ல. இப்போது வெளியான பிரம்மயுகம் படத்தில், மம்முட்டியின் அந்த கோரமான நடிப்புக்கு வலு சேர்ப்பதே படத்தின் அழுத்தமான கதை தான்.

நித்யா மேனன்

அப்படிப்பட்ட மலையாள படத்தில் இருந்து வந்த மலையாள நடிகை நித்யாமேனன் நடிப்பில் மிகச் சிறப்பாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். மாலினி 22, திருச்சிற்றம்பலம், சைக்கோ, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

காதலிக்க நேரமில்லை

இப்போது ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி டைரக்ட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: கேரளா புடவையில் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கும் நடிகை அனிகா.. வைரலாகும் வீடியோ..!

மலையாள நடிகையாக நித்யாமேனன், மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழில் விஜய், தனுஷ். உதயநிதி, விஜய் போன்றவர்களுடன் நடித்த படங்களில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதிய படம்

இப்போது நித்யாமேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் விஷ்ணு வர்த்தனிடம் உதவி இயக்குனராக இருந்த காமினி என்பவர் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

படம் முழுக்க ரொமான்ஸ்

படம் முழுக்க ரொமான்ஸ், காமெடி, பேண்டஸி படமாக இது உருவாக்கப்பட உள்ளது. வினய் ராய், நவ்தீப் படத்தில் நாயகர்களாக நடிக்க, இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நித்யாமேனன் நடிக்கிறார்.

பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ், பாப்டர் மீடியா நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்

இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள், இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ் காண இப்பவே நாங்கள் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version