நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை படித்து முடித்த இவர் பத்திரிக்கையாளராக விரும்பியதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
மேலும் இவர் பூனாவில் இருக்கும் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடித்து பிலிம்பேர் விருதினை வென்றிருக்கிறார்.
நடிகை நித்யா மேனன்..
தற்போது நடிகையின் நித்யா மேனன் தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தமிழில் கடைசியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
ரசிகர்கள் விரும்பக்கூடிய நித்யா மேனன் ஆரம்ப காலத்தில் ஹனுமன் என்ற இந்திய ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டு 7 O ‘clock என்ற கன்னட படத்தில் நடித்த இவர் 2008 ஆம் ஆண்டு ஆகாச கோபுரம் என்ற மலையாள படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.
மலையாளம் மற்றும் அக்கடதேச படங்களில் படு பிஸியான நடிகையாக மாறி இருக்கக்கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் வெளியிட்ட கருத்தானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங்கான நித்யா மேனன் பேச்சு..
தமிழில் 180 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவர் வெப்பம், மாலினி 22, பாளையம் கோட்டை, ஜேகே, என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல், சைக்கோ, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர் வட்டத்தை அதிகரித்துக் கொண்டவர்.
மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் ரணகளப் படுத்திய இவர் பாரதிராஜாவுடன் சேர்ந்து செய்த சேட்டைகள் இன்றும் ரசிகர்களின் முன் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது என்று கூறலாம்.
இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசும் போது பெண்களுக்கு அழுகை ஒரு நிச்சயமான பலமான ஒரு ஆயுதமாக இருக்கும். ஆனால் ஆண்களை நினைத்தால் தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.
ஏனென்றால் அவர்கள் மிக எளிதில் அழ மாட்டார்கள். சிறு வயது முதற்கொண்டே ஆண்கள் என்றால் அழக்கூடாது என்று சொல்லிச், சொல்லி வளர்த்ததால் தான் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அழுவது என்பது உண்மையில் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் அழுது இறக்கி வைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் வலிகள் குறையும். உங்கள் பாரத்தை அழுது முடித்து இறக்கி விட்டால் அடுத்த வேலையை நோக்கி நீங்கள் நகர்ந்து சென்று விடலாம்.
எனவே பெண்களை பொருத்த வரை அழுவது என்பது மிக ஈஸியான விஷயம். எனினும் ஆண்கள் நினைத்தாலும் இதை பண்ண முடியாது என்பதால் எனக்கு மிகவும் அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது என்று கூறிய நித்தியா மேனனின் பேச்சு தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இவர் கூறிய விஷயம் உண்மையிலேயே உண்மை தான் என்று பல ரசிகர்களும் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து வருவது தான் பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.