சீரியல் நடிகை நித்யா ரவீந்திரன் மகள் இவரா..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை நித்யா ரவீந்திரன்-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை நித்யா ரவீந்திரன் மட்டுமில்லாமல் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தியில் கூட நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா ரவீந்திரன். குணச்சித்திர வேடங்கள் என்று யோசித்தாலே சட்டென நினைவுக்கு வரும் சில நடிகைகளின் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய இவர் மிகச் சிறந்த நடிகையாக பலராலும் அறியப்படுகிறார். இவருடைய தந்தை ஒரு அரசாங்க ஊழியர் ஆவார்.

அரசாங்கத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பொழுது டிராமா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இவரது டிராமா குழுவில் ஒரு நடிகையாக பயணித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணித்திருக்கிறார் நடிகை நித்யா.

இவருடைய உண்மையான பெயர் நித்யா சாந்தி என்பதாகும். கடந்த 1987ஆம் ஆண்டு ரவிந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு அர்ஜுன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும்  இருக்கிறார்கள்.

இந்நிலையில், அவருடைய மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …