‘அடியே கொல்லுதே, அழகோ அள்ளுதே…’ ஹோம்லி அழகில் ஜொலிக்கும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இருப்பவர்களில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் பல படங்களில், சிறப்பாக தனது நடிப்பை வழங்கி இருக்கிறார்.

 ‘டிக் டிக் டிக்’, திமிரு புடிச்சவன், பொதுவாக எம்மனசு தங்கம்,  சங்கத்தமிழன், பார்ட்டி, ஒரு நாள் கூத்து,  பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் படங்களில் இவரது கேரக்டர் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால், தமிழ் சினிமாவில் பெரிய அளவில் இவர் சாதிக்க முடியவில்லை. இவர் மதுரைக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அது இவரது உடல்வாகுவிலும், பேசும் தொனியிலும் சினிமாவிலேயே சாதாரணமாக வெளிப்படும். திமிரு புடிச்சவன் படத்தில், எஸ்ஐ மடோனாவாக ஒரு கலக்கு கலக்கி இருப்பார் நிவேதா பெத்துராஜ்.

தமிழ் படங்களில் நடிப்பது குறைவு என்றாலும், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்பெல்லாம் சினிமா நடிகைகள், தங்கள் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் காட்டி பட வாய்ப்பு கேட்பது வழக்கம்.

இன்றைய சோஷியா மீடியா காலத்தில், நடிகைகளின் வைரலாகும் புகைப்படங்களே அவர்களுக்கு பட வாய்ப்பை எளிதாக பெற்றுத் தந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள், இளசுகளின் மனசை அள்ளி விடுகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …