டின்னர் சாப்பிட அழைத்து.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட இயக்குனர்.. அட இவரா..? – நிவேதா பெத்துராஜ் ஓப்பன் டாக்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டியவர். ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை.

நடிகை நிவேதா பெத்துராஜிற்கு நன்றாக தமிழ் பேச எழுத தெரியும் என்பதால் தமிழ் சினிமாவில் இவருடைய கப்பலால் நீந்த முடியவில்லை.

இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்தார். அதிலும் பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் உடலோடு ஒட்டிய நெகு நெகுவென இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பாடல் காட்சியில் கிளுகிளுப்பான ஆட்டம் போட்டு இருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் முன்னணி இயக்குனர் ஒருவர் நிவேதா பெத்துராஜ்-ஐ சந்தித்திருக்கிறார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த இயக்குனர்.. ஒரு கட்டத்தில்.. டின்னர் சாப்பிடலாமா..? என்று கேட்டிருக்கிறார். ஆனால் உடனடியாக எனக்கு வேறு வேலை இருக்கிறது முடியாது என மறுத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

அதன் பிறகு மீண்டும் வற்புறுத்தி கேட்டிருக்கிறார். அழைப்பது முன்னணியை இயக்குனர் அல்லவா..? சரி என்று கூறி அவருடன் இரவு உணவு அருந்த சென்றிருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

ஆனால் சென்ற இடத்தில் இயக்குனர் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார். நடிகை நிவேதா பெத்துராஜ்-ஐ தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறி இருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத நிவேதா பெத்துராஜ் அந்த இயக்குனரை அந்த இடத்திலேயே சாத்து சாத்து என சாத்தி இருக்கிறார். இந்த விஷயத்தை என்னிடம் நிவேதா பெத்துராஜ் கூறினார் என்று பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

சரி இவ்வளவு விஷயம் சொல்லி விட்டீர்களே..? யார் அந்த இயக்குனர் என்றும் சொல்லிவிட்டால் எனக்கு செய்தியை சொல்வதற்கு எளிமையாக இருக்கும் என்று நிவேதா பெத்துராஜ்-ஐ பார்த்து கேட்டேன்.

ஆனால் அவர் இந்த அளவுக்கு விஷயத்தை கூறியதே பெரிய விஷயம். இந்த விஷயத்தை அந்த இயக்குனர் பார்த்தாலே செருப்படி வாங்கியது போல் இருக்கும்.

அவருடைய பெயரை கூறி அவருடைய இத்தனை நாள் உழைப்பை நான் கெடுக்க விரும்பவில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் குழந்தைகள் இருக்கிறது அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே அவருடைய பெயரை நான் வெளியிட விரும்பவில்லை நான் கூறியதை மட்டும் வெளியிடுங்கள் போதும் என கூறியிருக்கிறாராம் நிவேதா பெத்துராஜ்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam