எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

மதுரையில் பிறந்த துபாயில் வளர்ந்த நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

இவர் தமிழில் வெளியான ஒருநாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும், பிரபலத்தையும் கொடுத்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக தெலுங்கில் நடித்த இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையை என்ற இடத்தை பிடித்தார்.

இதையும் படியுங்கள்: ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவேள்..!

குறிப்பாக நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடித்தவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமான திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது.

தெலுங்கில் வெளியான ஆலா வைகுந்தபுர்ரமுலூ திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டுத்தக்க கூடியதாக இருந்து. இதனிடையே சமீபனாக்களாக நிவேதா பெத்துராஜ் குறித்த ஒரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிவேதா பெத்துராஜிற்கு கோடி கணக்கில் சென்னையில் பங்களா மற்றும் சொகுசு கார் ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாகவும்,

நிவேதா பெத்துராஜ் கார்பந்தயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருவதால் கார் பந்தயத்தில் ஈடுபடத் தேவையான அனைத்து வசதிகளும் தன்னுடைய அரசியல் சார்ந்த முறையில் உதயநிதி உதவி வருவதாக வதந்தி செய்திகள் வெளியாகிய சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியதை தொடர்ந்து தற்போது மௌனம் களைத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ், “சமீபகாலமாக எனக்காக பணம் செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி ஆத்தா… என்ன.. இத்த தண்டி ஆகிட்டாங்க… உடல் எடை கூடி குண்டாகிய அமலாபால் – ரசிகர்கள் வியப்பு!

இப்படியான தகவல்களை பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் இந்த தகவல்களை சரிபார்ப்பார்கள் என எண்ணி அமைதியாக இருந்தேன்.

கடந்த சில நாட்களாக பரவும் பொய்ச் செய்தியால், நானும் என் குடும்பமும் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசித்துப் பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ்ந்து வருகிறேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம். திரையுலகிலுமே கூட நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ சென்று பட வாய்ப்புகளுக்காக போய் நின்றது கிடையாது.

நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். அவையெல்லாம் என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் ஒருபோதும் பணத்துக்காகவோ, வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

2013-ம் ஆண்டிலிருந்து கார் ரேஸிங்கில் விருப்பத்தின்பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இதுதவிர என்னைப் பற்றி இதுவரையில் பேசப்படும் அவதூறுகளில் எதுவுமே உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, இறுதியாக நல்ல இடத்தில் இருக்கிறேன். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.

இதையும் படியுங்கள்: அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

எனவே இதை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்லவில்லை. இன்னும் பத்திரிகைத் துறையில் மனிதம் மீதமிருக்கிறது என்பதை நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரிபார்த்துவிட்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்தை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். எனக்காக இதுவரையில் பேசிய அனைவருக்கும் நன்றி” என்று நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் நிவேதாவிற்கு ஆதரவு கருத்து கூறி வருகின்றனர்.

முன்னதாக திரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம் சமூக வலைதளங்களில் எங்கும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதை எடுத்து திரிஷா அதற்கு கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகைகளுக்கு இது போன்று நடக்கும் அவதூறான விஷயங்களில் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துளையும் தங்களது எதிர்ப்புகளையும் அவர்களுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version