நிவேதா பெத்துராஜ்,(Nivetha Pethuraj) பக்கத்து வீட்டு பெண் போல தெரியும் ஒரு நடிகை. ஏனெனில், இவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். நம் தமிழ்நாட்டு பொண்ணு. எனவே, பார்த்தவுடனே மனதுக்கு நெருக்கமானவராக பரிச்சயமாகி விடுகிறார்.இப்போது,
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில், நல்ல நடிகையாக பெயர் பெற்றிருக்கிறார். இவர், தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவர் அறிமுகமான படம், ஒருநாள் கூத்து, இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் உடன் நடித்திருந்தார்.
நிவேதா பெத்துராஜ், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெத்துராஜ், இதையே தனது பெயரின் பின்னால் வைத்துள்ளார் நிவேதா. இவருக்கு நிஷாந்த் என்ற தம்பி இருக்கிறார். சிறு வயதிலேயே துபாய் சென்றுவிட்ட நிவேதா, துபாயில் பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து விட்டு, அதன்பின்பு தமிழ் நாட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார்.
Nivetha Pethurajதமிழ் சினிமாவில் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபுடிச்சவன், சங்கத் தமிழன், பொன்மாணிக்க வேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த படங்களில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் மற்றும் விஜய் ஆண்டனி உடன் நடித்த திமிரு புடிச்சவன் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன.
மற்ற படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. டிக் டிக் டிக் படத்தில், வான்வெளி வீராங்கணையாக, இவர் நடித்திருப்பார்.
Nivetha Pethurajதமிழ் படங்களில் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிவேதா பெத்துராஜ் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆனால், தமிழ் படங்களில் தரப்படும் அளவுக்கு, தெலுங்கு படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கிளாமர் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால், தமிழ் படங்களில் நடிக்கும்போது ஹீரோயின்களுக்கு கேரக்டர் ரோல் தரப்பட்டு, அவர்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அதனால், தமிழ் படங்களில் நடிக்க மற்ற மொழி நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தமிழ் பொண்ணாக, தூத்துக்குடியை சேர்ந்த நிவேதா பெத்துராஜூக்கு சரியான தமிழ் படங்கள் அமையாதது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Nivetha Pethurajஎனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் படங்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கிறார். சில வேளைகளில் கிளாமராகவும், சில நேரங்களில் மங்களகரமாகவும் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். எப்படி இருப்பினும் நிவேதா பெத்துராஜின் அழகை ரசிகர்கள், ரசித்து மகிழ்கின்றனர்.
Nivetha Pethurajவிரைவில் அவர், நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அழகும், நடிப்பாற்றலும் மிகுந்த அவருக்கு, வரும் காலத்தில் நிறைய படங்கள் அமைய வாய்ப்புள்ளதாக, ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.