“மற்ற நடிகைகளிடம் காட்டுற வேலையை என்கிட்ட…” உதயநிதி குறித்து ஓப்பனாக பேசியுள்ள நிவேதா பெத்துராஜ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் 2016-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: இறங்கிய மேலாடை.. எட்டி பார்க்கும் மொசக்குட்டி.. தாராள கவர்ச்சி காட்டி சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..

இவர் தமிழ்நாட்டில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்தவர். இவர் சிறு வயதில் இருக்கும் போதே துபாய் சென்றதால் அங்கு இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் தனது கல்வியை கற்றவர்.

நிவேதா பெத்துராஜ்..

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2017-ஆம் ஆண்டு பொதுவாக எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு 2018 ஆம் ஆண்டில் டிக் டிக் டிக், திமிர் பிடித்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த சங்கத்தமிழன் என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்ததை அடுத்து ரசிகர்களின் ஆதரவு இவருக்கு அதிகரித்தது. இதனை அடுத்து இவர் 2020-ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் சீரும் சிறப்புமாக நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி இவர் தல அஜித்தை போலவே மிகச்சிறந்த கார் ரேசராகவும், பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

என்கிட்டயும் அந்த வேலையை காட்ட..

இந்நிலையில் அண்மை காலமாக இணையங்களில் நிவேதா பெத்துராஜ் குறித்து பல்வேறு வகையான நெகடிவ் விமர்சனங்கள் அடிக்கடி வெளி வந்து இணையத்தையே இயங்க விடாமல் செய்து விட்டது.

இதற்கு காரணம் இவரது ஆடம்பரமான வாழ்க்கைக்கு உதவியாக அரசியல் வாரிசு, தற்போதைய தமிழக அமைச்சர், முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பண உதவி செய்து வருவதாகவும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரினை வாங்கித் தந்திருப்பதாகவும் சொல்லப்பட்டு வருவதோடு அவர் கார் பந்தயங்களில் பங்கேற்க தான் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த உதவிகளை செய்து வந்ததாக வித விதமான வதந்திகள் பரவியது.

உதயநிதி பற்றி ஓப்பன் டாக்..

அத்தோடு உதயநிதி, நிவேதா பெத்துராஜ் சர்ச்சை கடந்த இரண்டு வாரங்களாக இணைய பக்கங்களை வியாபித்து உள்ளது. இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்ற பழைய நிகழ்ச்சிகள், பேட்டிகள் ஆகியவற்றில் நிவேதா பெத்துராஜ் பேசிய விஷயங்கள் அனைத்தும் கண், காது, மூக்கு வைத்து வேறு விதமான கண்ணோட்டத்தில் இணைய பக்கங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயம் ஒன்றை சமீப பேட்டி என்று சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் நிவேதா பெத்துராஜ். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

இதில் நிவேதா பெத்துராஜ் கூறியது படப்பிடிப்பு தளத்தில் நான் உதயநிதி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் எப்போதும் ஒரே இடத்தில் தான் இருப்போம். மூவரும் இணைந்து அரட்டை அடிப்போம், நிறைய விஷயங்களை கலாய்த்து கிண்டல்கள் எல்லாம் செய்வோம்.

ஆனால் மற்ற நடிகைகளிடம் காட்டுகிற வேலையை என்கிட்ட முடியாது. மற்ற நடிகைகளுக்கு ஆங்கிலம் அல்லது தெலுங்கு மற்றும் ஹிந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழை புரிந்து கொள்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள்.

ஆனால் எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும் அது மட்டும் அல்லாமல் ஏதேனும் சங்கேத வார்த்தைகள் அல்லது கோடு வேர்ட்டு பயன்படுத்தி பேசினால் கூட அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து விடுவேன்.

இதையும் படிங்க: அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

அந்தளவிற்கு எனக்கு தமிழ் நன்றாக தெரியும். இதனால் உதயநிதி ஸ்டாலினோ அல்லது நடிகர் சூரியோ என்னிடம் எதுவும் வச்சிக்க மாட்டார்கள். மறைமுகமாக கிண்டல் அடிப்பது போன்ற எந்த ஒரு விஷயமும் எனக்கு நடந்தேறியது இல்லை. அப்படி பேசினால் என்னால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும் அதுவும் அவர்களுக்கு தெரியும் என நிவேதா பெத்துராஜ் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version