“நான் நெனச்ச மாதிரியே என்னை ஏமாத்திட்டான்..” காதலன் குறித்து நிவேதா பெத்துராஜ்..! யாரா இருக்கும்..?

தமிழகத்தில் பிறந்தாலும் துபாயில் வளர்ந்த மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் .

தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ்:

அவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிப்பு ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்து என்றே சொல்லலாம்.

முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ச்சியாக அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

இதனிடையே தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய அவர் அங்கும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் நிவேதா:

இதனிலும் டோலிவுட் ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

நல்ல கவர்ச்சியான அழகு, தோற்றம் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் .

நடிப்பை தாண்டியும் கார் ரேஸ்ங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ் .சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நிவேதா பெத்துராஜ் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டார் .

இவருக்கு பெரிய பங்களா வீடு ஒன்றை துபாயில் வாங்கி கொடுத்திருப்பதாக இருவரும் ரகசியமாக கள்ள உறவில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது.

உதயநிதியுடன் ரகசிய காதல்?

பின்னர் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை நிவேதா பெத்துராஜ் இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருவருடைய எண்ணங்களுக்கு இருக்கக்கூடிய சக்தி குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசியதாவது, நான் என்ன நினைக்கிறேனோ எதை நினைத்து பயப்படுகிறேனோ அது கண்டிப்பாக நடந்து விடுகிறது.

நான் ஒருவரை காதலிக்கிறேன் அவன் என்னை ஏமாற்றி விடுவான்.. ஏமாற்றி விடுவான்.. என்று நான் நினைத்துக் கொண்டிருந்தால் நான் நினைச்ச மாதிரியே அவன் என்னை ஏமாத்திட்டான் என்ற முடிவு தான் கிடைக்கும்.

காதலை சூசகமாக கூறிய நிவேதா:

ஒருவேளை அவர் என்னை அதிகமாக காதலிக்கிறார்.. என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார்.. என்று நான் நினைத்தால் அதேபோல அவர் என்னை அதிகமாக காதலிப்பார் பத்திரமாக பார்த்துக் கொள்வார்.

இப்படி நம்முடைய எண்ணங்கள் தான் நம்மை தீர்மானிக்கின்றன. நம்முடைய எண்ணங்களும் யோசனைகளும் சரியாக இருந்தால் எதைப் பற்றியும் நாம் பயப்பட தேவையில்லை என பேசி இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

மறுபக்கம் நடிகர் நிவேதா பெத்துராஜ் யாரையோ காதலிக்கிறேன் என்று கூறுகிறாரே அவர் யாராக இருப்பார் என்று விவாதமும் இணைய பக்கங்களில் நடந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version