நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டிக் டிக் டிக், பொதுவாக எம் மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் – நிவேதா பெத்துராஜ்

இதில் பொதுவான எம் மனசு தங்கம் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நிவேதா பெத்துரராஜூடன் நடித்திருந்தார்.

மாதம் இருமுறை

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், துபாயில் நிவேதா பெத்துராஜூக்கு ரூ. 50 கோடியில் பங்களா வீடு ஒன்றை உதயநிதி வாங்கி கொடுத்திருப்பதாகவும் மாதம் இருமுறை உதயநிதியை காண்பதற்காக நிவேதா பெத்துராஜ் சென்னை சென்று செல்வதாகவும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது.

உண்மை கிடையாது

இதற்கு பதிலளித்த நடிகை நிவேதா பெத்துராஜ், இது எல்லாம் உண்மை கிடையாது. நான் இதுவரை என் சுய சம்பாத்தியத்தில்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன், என அவரே ஸ்டேட்மென்ட் விட்டு வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.

போதை பொருள் கடத்தல்

இந்நிலையில் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரத்தில், அவர் திமுக சார்ந்தவர் என்பதும் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படியுங்கள்: திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த செயல்.. கதறி அழுதேன்..

அவர் அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு, பலவிதமான கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அவர் இயக்கிய மங்கை படமும், போதைப்பொருள் கடத்தியதில் வந்த லாபத்தில் எடுக்கப்பட்ட படம்தான் என்பதும் உறுதியானது. அதை போலீஸ் விசாரணையில் ஜாபர் சாதிக்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

கிருத்திகா உதயநிதி

இப்படி போதை பொருள் கடத்தல் பணத்தில் எடுக்கப்பட்ட மங்கை படத்தின் பிரமோவுக்காக ஒரு பாடலை அறிமுகப்படுத்தியது உதயநிதி மனைவி கிருத்திகா என்பது மேலும் புகைச்சலை அதிகப்படுத்தியது. அவர் மீதும் அதிக விமர்சனத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டவுடன் அவருக்கு திமுகவில் கொடுக்கப்பட்ட பதவி பொறுப்புகள் பறிக்கப்பட்டாலும், அவரது கடத்தல் விவகாரம் திமுகவினருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

பைத்தியமாகி விட்டனர்

இந்த சூழலில் கிருத்திகா உதயநிதி ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில், சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். ஏன் என்றால், எல்லாருமே கொஞ்சம் பைத்தியமாகி விட்டனர், என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

இப்படி கிருத்திகா சொல்ல காரணம், ஜாபர் சாதிக் கடத்தல் விவகாரம் குறித்த சர்ச்சைக்காகவா அல்லது நிவேதா பெத்துராஜ், உதயநிதி சார்ந்த விமர்சனம் சார்ந்ததா என்பது இப்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இதற்கு பலருக்கும் நெகடிவ் ஆன பதில்களை தந்து வருகின்றனர்.

நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த இந்த பதிவு பலருக்கும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version