இவர் என்னோட புருஷன்.. இவங்க என்னோட குழந்தைங்க.. கல்யாணம் எப்போ நடந்துச்சு..? ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்..!

நடிகை நிவேதா தாமஸ் 1994-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தவர். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தியவர்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்ததை எடுத்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரளா அரசு விருதை வென்றார்.

இவர் என்னோட புருஷன்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் குருவி படத்தில் தளபதி விஜயின் தங்கையாக அறிமுகமானதை அடுத்து 2009-ஆம் ஆண்டு வெளி வந்த சமுத்திரக்கனியின் அரசி தொடரில் ராதிகாவின் மகளாக நடித்து பிரபலம் ஆனார்.

மேலும் 2009-ஆம் ஆண்டு தமிழில் ராஜாதி ராஜா படத்திலும் 2011-இல் போராளி படத்திலும் 2013-இல் நவீன சரஸ்வதி படத்திலும் 2014-இல் ஜில்லா படத்தில் நடித்த இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த அசத்தியிருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ராஜராஜேஸ்வரி, மை டியர் பூதம், தென் மொழியியல், அரசி, சிவமயம் போன்ற சீரியல்களில் நடித்து இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

 

தற்போது தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ITS BEEN A WHILE…BUT FINALLY என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்திருப்பார்.

இந்த போஸ்டை பார்த்து பலரும் அவருக்கு திருமணம் ஆகப்போவதால் தான் இது போன்ற பதிவினை பதிவேற்றி இருக்கிறார் என்று நினைத்த படி வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.

இவங்க என்னோட குழந்தைகள்..

இதனை அடுத்து இதை எதற்கு சொல்லி இருந்தார்கள் தெரியுமா? இவர் நடிப்பில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளிவர இருக்கின்ற தெலுங்கு திரைப்படமான சின்ன கதா காது பட டீசர் லாஞ்சில் தான் இது பற்றி பேசி இருக்கிறார்.

அப்படி பேசும் போது தனது கேரியரில் இந்த படம் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ட்விட்டரில் இது குறித்து பதிவிட்ட போது நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பலரும் நினைத்தார்கள்.

இதனை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்ததோடு எனக்கு யார் மாப்பிள்ளை பார்த்தார்கள் என்று கேட்டு விட்டேன் இப்போது சொல்கிறேன் இங்கு இருப்பவர் தான் என்னுடைய கணவர்.

என்னோடு இந்த படத்தில் நடித்த இந்த இரண்டு குழந்தைகளுமே என்னுடைய குழந்தைகள் என்று சிரித்தபடியே அறிமுகம் செய்து வைத்ததை அடுத்து அனைவரும் ஆகஸ்ட் 15 வரைக்கும் இந்த படத்தை பார்க்க காத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

கல்யாணம் நடந்தது பத்தி ஷாக் கொடுத்த நிவேதா தாமஸ்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த படம் வெளி வருவதை தான் இப்படி ட்விட்டரில் போட்டாரா? என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இவரின் வித்தியாசமான பேச்சை பலரும் ரசித்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சின்ன கதா காது வெற்றி படமாக அமைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் நிவேதா தாமசுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version