இவர் தான் என் HUSBAND.. இவங்க என் பசங்க.. கல்யாணம் எப்போ நடந்துச்சு..? அதிர்ச்சி கொடுத்த நிவேதா தாமஸ்..!

தமிழில் நடிகர்கள் ரஜினி கமல்ஹாசனுக்கு மகளாக நடித்த ஃபேமஸ் ஆனவர் நடிகை நிவேதா தாமஸ் இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவான குருவி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு முன்பு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நிவேதா தாமஸ் சினிமாவிலும் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். குருவி திரைப்படம் மட்டுமில்லாமல் ஜில்லா திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமில்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு மகளாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நிவேதா தாமஸ் அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மகளாக தர்பார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி பிஸியான நடிகையாக இருக்கும் இவர் தன்னுடைய twitter பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை கொண்டு இவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல்களை இணையத்தில் பரப்பினார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், நிவேதா தாமஸ் பதிவு செய்த அந்த பதிவு ஒரு திரைப்படத்தைப் பற்றி என்பது சமீபத்தில் தான் தெரியவந்தது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நிவேதா தாமஸ் திருமணம் செய்து கொள்வதாக செய்திகள் வெளியானதை பார்த்து அவருடைய அம்மாவே அதிர்ச்சியானாராம்.

குழந்தைகள் ஏதும் இருக்கா..? என்று நக்கலாக கிண்டலடித்தாரம். இந்நிலையில்,  என் அம்மா கேட்ட கேள்விக்கு நான் இப்போது பதில் கொடுக்கிறேன் இது தான் என்னுடைய கணவர் இவர்கள்தான் என்னுடைய இரண்டு மகன்கள் மூத்தவன் பேரு அருண் இளையவன் பேரு வருண் என்று படத்தில் தனக்கு கணவராகவும் மகன்களாகவும் நடித்தவர்களை அறிமுகப்படுத்தி அரங்கத்தில் இருப்பவர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் மூழ்கடித்தார் நிவேதா தாமஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version