“அடேங்கப்பா.. எத்த தண்டி ஆகிட்டாங்க…” – உடல் எடை கூடி குண்டாகி போன நிவேதா தாமஸ்..!

பிரபல நடிகை நிவேதா தாமஸ் நடிகர் கமலின் பாபநாசம் மற்றும் நடிகர் ரஜினியின் தர்பார் ஆகிய திரைப்படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது உடல் எடை கூடி ஆளே மாறிப் போய் இருக்கிறார் அம்மணி சென்னையில் பிறந்து வளர்ந்த நிவேதா தாமஸ் கடந்த சில வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆனால் 90ஸ் கிட்ஸ் இன் மிகவும் விருப்பமான தொலைக்காட்சி தொடரான மைடியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே குணசித்திர வேடங்களிலும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் பாபநாசம் படத்தில் நடிகர் கமலின் மகளாகவும் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்தவர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றார்.

ஆனால் தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. எனவே தெலுங்கில் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் நடிகை ரெஜினா உடன் சேர்ந்து சாகினி தாகினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் இன் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் கிடைக்கின்றனர்.

நிவேதா தாமஸா இது..? என்று சந்தேகப் பார்வையுடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாமல் உடல் எடை கூடிக்கொண்டே போய் இருக்கிறார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …