விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. இருந்தாலும் இதில் யார் வெல்வார்கள்? யார் வெளியேறுவார்கள்? என்று முந்தைய சீசங்களில் கணித்து சொன்னது போல எவராலும் முழுமையாக கணித்து கூற முடியாத அளவிற்கு கடுமையான போட்டியாக உள்ளது.
ஏற்கனவே வனிதா அக்காவின் மகள் ஜோவிகா நடிகை விசித்ராவிடம் நடந்து கொண்ட முறைகள், பேசிய பேச்சு இவையெல்லாம் ஒரு மிகப்பெரிய சுனாமியை சமுதாயத்தில் ஏற்படுத்தி பலவிதமான விமர்சனங்களை பெற்றது.
மேலும் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் நிகழ்ந்த எலிமினேஷனில் எதிர்பாராத நபர் வெளியேறியது கடுமையான ஷாக்கிங் ரசிகர்களுக்கு கொடுத்தது. இதனை அடுத்து இறுதி சுற்று யார் வெல்வார்கள் என்ற பரபரப்பு மேலும் பற்றி கொண்டது.
எனவே பிக் பாஸ் சீசன் 7 படுமோசமான முறையில் நடந்து வருவதாக விமர்சனங்களை முன் வைத்திருக்கும் ரசிகர்கள் இந்த சீசனில் சண்டை, காதல் எல்லாமே எல்லை மீறி நடப்பதாகவும், கமலஹாசன் ப்ரோமோவை பார்த்துதான் தொகுத்து வழங்குவது அப்பட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் போட்டியாளர்களை விட இந்த முறை தொகுப்பாளர் கமல்ஹாசன் தான் அதிக அளவு டிரோல்களை சந்தித்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பிக் பாஸ் 7 வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்ன கருமாந்தரம்.. டா.. இது.. இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று மண்டையில் பிய்த்துக் கொள்கிறார்கள். மேலும் இந்த வீடியோவில் இரவு நேரத்தில் பூர்ணிமா தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய படுக்கைக்கு அருகே சென்று நிக்சன் படுத்துக் கொள்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் தான் கொந்தளித்து அக்கா, அக்கானு என்று சொல்லிட்டு என்னடா.. பண்ற.. இவன பாருங்க.. என்று அவர்களது மனக்குமுறலை பதிவிட்டு வருகிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் இனி பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கக்கூடாது. சமூக சீரழிவை ஏற்படுத்துகின்ற இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி இருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.