பட வாய்ப்பு இல்லை.. பணத்துக்காக ரூட்டை மாற்றிய நடிகை பிக்பாஸ் அபிராமி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றவர் தான் அபிராமி வெங்கடாச்சலம்.

இவர் முன்னதாக மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் அபிராமி:

அபிராமி கடந்த 2016 ஆம் ஆண்டில். Ctrl Alt Delete என்ற வலைத்தொடரில் நடித்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் .

அதன் பிறகு சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்றது ரியாலிட்டி ஷோவில் தொகுத்து வழங்கி தொகுப்பாளராக தனது கரியரை தொடங்கினார்.

பின்னர் மூத்த நடிகர்கள் நாசர் மற்றும் சத்யராஜ் நடித்து ஆனந்தி சங்கர் இயக்கிய நோட்டா திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமானார்.

அதுதான் இவரது முதல் வெள்ளித்திரை படம் கூட பின்னர். மேலும் கலாவ் என்ற திரைப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

பிக்பாஸ் அபிராமி:

அதே ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சீசனில் மூன்றாவது இடத்தை படித்தார் அபிராமி .

இதனாலே அவர் காற்று வெளியிடை, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக முகம் அறியப்பட்டார்.

குறிப்பாக அஜீத் நடிப்பில் 2019 வெளியான திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தில் அபிராமி ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாடலிங் செய்து விளம்பர படங்களில் நடித்தும் வந்தார்.

நடனம் மற்றும் பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் அபிராமி ஜோடி ஜோடி நடனம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்.

மேலும் ராக்கெட்ரி, வான் மூன்று, துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது ரன்னர் என்ற இடத்தையும் பிடித்தார்.

தனது சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அபிராமி அப்போது புகைப்படங்களை வெளியிடுவதியும் போட்டோ ஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

பணத்திற்காக ரூட் மாற்றிய அபிராமி:

அதன் மூலம் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வந்தார். ஆனாலும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

இதனால் ஒரு அதிரடி முடிவு ஒன்று எடுத்து இருக்கிறார் அபிராமி. ஆம், திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சீரியல் நடிகையாக நுழைந்துள்ளார் அபிராமி.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் எமோஷனல் டிராமாவான வீர என்ற தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் அபிராமி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் .

வீரா சீரியலில் திருமணத்தில் மணப்பெண் தோழி என்ற ஒரு ரோலில் நடித்து வருகிறார் அபிராமி வெங்கடாசலம்.

இந்த ரோல் அந்த தொடரில் தொடர்ந்து இடம் பெறுமா? அல்லது சில நாட்கள் மட்டும் நடித்துவிட்டு செல்வாரா என கேள்வி எழுந்திருக்கிறது.

இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பிரபலத்தையும் அடையாளத்தையும் வைத்துக் கொண்டு இருக்கும் அபிராமிக்கே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையா? என என்பதுதான் ரசிகர்களின் ஆச்சரிய கேள்வியாக இருக்கிறது.

அபிராமியே பட வாய்ப்பில்லாமல் பணத்திற்காக இப்படி ரூட்டை மாற்றி இருக்கிறாரே என பலரும். பரிதாபப்பட்டுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version