திமிர் பிடித்த கரீனா கபூர்..! அதுக்கு யாருமே இல்லையாம்..!

பாலிவுட் திரைப்பட உலகில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை கரீனா கபூர் இவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

43 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்றும் தனக்கான இடத்தை முன்னிலையில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

பாலிவுட் நடிகை கரீனா கபூர்:

பாலிவுட்டின் டாப் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் நடிகை கரீனா கபூர் அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இவர் ஷாருக்கான் சல்மான்கான் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தார் .

2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டார் நடிகை கரீனா கபூர் .

மும்பை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஹிந்தியில் மட்டுமே அதிக திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

இதனிடையே சினிமாவில் பிரபல நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த சமயத்தில் இரண்டாம் தாரமாக சைஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

10 வயசு வித்தியாசத்தில் திருமணம்:

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 வயசு வித்தியாசம் உள்ளவர்கள் என்பதால் இவர்களது திருமண வாழ்க்கையும் காதலையும் ஜோடி பொருத்தத்தையும் நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்து தள்ளுவார்கள்.

சைஃப் அலி கான் நட்சத்திர ஹீரோவாக வளர்ந்து வந்த நேரத்தில் கரீனா கபூர் கை குழந்தையாக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று கூட சமூக வலைதளங்களில் வெளியாகி படுமோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

ஆனால், அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதே கிடையாது. மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கரீனா கபூருக்கு திரைப்பட வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டது.

படங்களில் நடிப்பதை தாண்டி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதில் கோடில் கணக்கில் வருமானத்தை சம்பாதித்து வருகிறார் .

மேலும், கோடி கணக்கில் முதலீடு செய்து சில பல தொழில் ரீதியாகவும் வணிக ரீதியாக பல தோல்விகளை தழுவினாலும் அதன் மூலம் பல கணிசமான வருமானத்தை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் சைஃப் அலி கான்கரீனா கபூர் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக அண்மையில் பாலிவுட் சினிமாவில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அது வெறும் வதந்தி செய்தி என பின்னர் செய்திகள் வெளியாகியது. கரீனா கபூர் பாலிவுட் சினிமாவில் நெபோடிஷம் எண்ணம் கொண்டவர் என பல பேர் விமர்சித்திருக்கிறார்கள் .

என்னைத்தவிர பாலிவுட்டில் யாருமில்லை:

குறிப்பாக நடிகை கங்கனா ரனாவத் கரீனா கபூரை பல பேட்டிகளில் அவர் வாரிசு நடிகை என்ற திமிர் கொண்டவர் என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கரீனா கபூரின் பேச்சு சமூக வலைதள வாசிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் கரீனா கபூர் இடம் உங்களை விட Fashion Sense அதிகம் மிகுந்த பாலிவுட் நடிகைகள் யார்? என்று கேள்வி எழுப்பியதற்கு “அப்படி யாருமே இல்லை” என திமிராக பதில் கொடுத்துள்ளார் கரீனா கபூர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version