என்னை யாரும் வெளியே தள்ளவில்லை ! அதிமுக வில் இணைந்த C.T.R நிர்மல் குமார் பேச்சு

அதிமுகவில் இணைந்த தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து விலகிய பிறகு தன்னை யாரும் வெளியே தள்ளவில்லை நானாகத்தான் வெளியேறினேன் என்று கூறியுள்ளார்.  ஒரு கட்சியுடன் இணைவது வேடிக்கையான விஷயம் அல்ல அல்லது அது ஒரு ஷாப்பிங் போகிற  விஷயம் அல்ல. இது ஒரு உணர்ச்சி” என்று சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நிர்மல் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார். அக்கட்சியில் இருந்து விலகிய அவர், அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

மார்ச் 6 அன்று, சி.டி.ஆர். கட்சியை விட்டு விலகுவது குறித்த தனது முடிவை ட்விட்டரில் தெரிவித்துள்ள நிர்மல் குமார். “கடந்த 1.5 வருடங்களாக என்னால் முடிந்த அளவு இக்கட்டான சூழ்நிலைகளில் பயணித்தேன்! கடுமையாக உழைத்தேன், நேர்மையாக உழைத்தேன், வலி மட்டுமே மிச்சம்! குட்பை” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த முடிவிற்குப் பிறகு, அவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் வீட்டிற்குச் சென்று அதிமுகவில் இணைந்தார்.அதிமுக கட்சி தனது ட்விட்டர் பக்கத்திலும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சிடிஆர் நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது ராஜினாமா அறிக்கையில், “கடந்த ஓராண்டாக தலைவர்களும், தொண்டர்களும் செருப்புகளாகவே கருதப்படுகிறார்கள், கட்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உளவு பார்ப்பதில் எந்த பயனும் இல்லை” என்று ராஜினாமா அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மனநலம் குன்றிய ஒருவரால் கட்சி வழிநடத்தப்படுகிறது, கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டை ஒப்பிடும் போது கட்டமைப்பு 20 சதவீதம் கூட இல்லை. கற்பனையில் வாழ்பவரால் அடிப்படை யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது” என்றும் .கூறியுள்ளார்.

ஆனால், அவரது ராஜினாமா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரு கட்சியில் சேருகிறார்கள், நூற்றுக்கணக்கானவர்கள் ஒரு கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். அப்படித்தான் அரசியல் இருக்க வேண்டும்.. தமிழகத்தில் ஒரு தேசிய கட்சி வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு உறுதியுடன் இயங்க வேண்டும்.”

மேலும், “டெல்லி மதுபான ஊழல் வழக்கை போல தமிழக டாஸ்மாக் ஊழல் வழக்கு எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படத் தயாராக இருப்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். அவர்கள் ஒன்றாக அமர்ந்து ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும். இதற்க்காகத்தான் மத்திய அரசை எதிர்ப்பதே வேலை இவர்களுக்கு வேலை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …