ஒடிசா விபத்தில் சிக்கிய ரயில்பெட்டியில் வீசிய பிண வாடை..! – சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

ஒடிசா விபத்தில் சிக்கிய ரயில் பெட்டியில் பிண வாடை வீசியதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு சென்று மீண்டும் சோதனை நடத்தபோது தெரிந்த உண்மை அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் யஸ்வந்த்பூர் ஹவுரா அதிவேக ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் பலியாகி இருக்கின்றனர்.

விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தவர்கள் மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

அதிலும் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போயிருக்கின்றன. மரபணு சோதனைக்காக அவை எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் இருந்த விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அந்த பகுதியிலேயே அப்புறப்படுத்தி வைத்துவிட்டு தண்டவாளத்தை சரி செய்து மீண்டும் ரயில் போக்குவரத்தை சரி செய்து இருக்கிறது ரயில்வே துறை.

இந்நிலையில் அப்புறப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் இருந்து பிண வாடை வருவதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மாநில அரசின் உதவி உடன் அங்கிருந்து ரயில் பெட்டியை ஆய்வு செய்தனர்.

அப்போதுதான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்யகுமார் சவுத்ரி கூறியதாவது, அந்த ரயில் பெட்டியில் பிணவாடை வீசியது உண்மைதான்.

இதனை தொடர்ந்து அந்த ரயில் பெட்டிகளில் நாங்கள் சோதனை செய்தோம். அப்படி சோதனை செய்தபோது அந்த ரயில் பெட்டியில் இருந்த மூன்று டன் முட்டைகள் அழுகி உடைந்த நிலையில் இருக்கின்றன.

அவை தான் இந்த துர்நாற்றத்திற்கு காரணம். மற்றபடி ரயில் பெட்டியில் மனித உடல்கள் எதுவும் கிடையாது. அங்கிருந்த எல்லா முட்டைகளையும் துர்நாற்றம் வீசாத அளவுக்கு அப்புறப்படுத்தி இருக்கிறோம்.

அந்த துர்நாற்றம் தான் கடந்த சில நாட்களாக வீசி இருக்கிறது. மூன்று டிராக்டர்களை கொண்டு வந்து அதில் உடைந்து அழுகி போய் இருக்கும் முட்டைகளை எடுத்துச் சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர்.

மூன்று டன் முட்டைகள் அருகில் இருந்த கிராமங்களை பிண வாடையில் ஆழ்த்திய இந்த சம்பவம் கிராம பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *