“சப்பாத்தி ஜீரணம் ஆகாதே…பெருசுக புலம்பலா..!” ஓம சப்பாத்தி செய்தா Problem சால்வ்..!

இரவில் என்ன செய்வது மாவில்லை என்றால் ஒரே பிரச்சனையாகத்தான் இல்லத்தரசிகளுக்கு இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் சுலபமாக சப்பாத்தியை செய்து விடலாம் என்று பிளான் செய்தாலும்  வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எளிதில் ஜீரணமாகாது என்று சலித்துக் கொள்வார்கள்.

 இனி அவர்கள் சப்பாத்தியை சாப்பிட்டாலும் இரவில் எளிதில்  ஜீரணம் ஆகுவதோடு இனி எப்போது இந்த மாதிரியான சப்பாத்தியை செய்வீர்கள் என்று கேட்கக் கூடிய அளவு அருமையான ஓம சப்பாத்தியை எப்படி செய்வது என்று இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஓம சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு அரை கிலோ
  2. 25 கிராம் ஓமம் தேவையான அளவு உப்பு
  3. பிசைய வென்நீர்

செய்முறை

எப்போதும் போல நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் மாவினை ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். இதனோடு தேவையான அளவு உப்பு மற்றும் எடுத்து வைத்திருக்கும் ஓமத்தை போட்டு விடுங்கள்.

 பிறகு மாவினை நன்றாக கலக்கி விடவும் மாவு நன்றாக கலந்த பின்பு சுடுநீரில் மாவினை நன்கு பிசைந்து கொள்ளவும். இது எப்போதும் போல் சப்பாத்தி பதத்தில் நீங்கள் பிசைந்து விட்டால் ஒரு ஸ்பூன் அளவு நெய்யை விட்டு மீண்டும் நன்றாக அழுத்தி பிசைய வேண்டும்.

 இந்தக் கலவையை நீங்கள் அப்படியே நன்கு அடித்து மேலும் பிசைந்து கொள்ளுங்கள். கால் மணி நேரம் நன்கு பிசைந்த மாவினை பாத்திரத்தில் அடித்து பிசையவும்.

பின்னர் இந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்து மாவை தொட்டுப் பார்த்தால் பொது பொதுவென்று இருக்கும்.

 இந்த பொது பொதுவென்று இருக்கக்கூடிய மாவை சிறு சிறு உருண்டைகளாக மாற்றி விடுங்கள். இதனை அடுத்து சப்பாத்திக்கல்லில் இடு மாவை போட்டு சப்பாத்தி எப்படி நீங்கள் பரத்தி எடுப்பீர்களோ அதுபோல குளவியால் பரப்பி எடுங்கள்.

 பரப்பிய இந்த சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு அடுப்பில் மிதமான தீயில் வாடி எடுக்கவும் இப்போது சூடான சுவையான எளிதில் ஜீரணமாகும் ஓம சப்பாத்தி ரெடி.

 இந்த சப்பாத்தியை உண்ணக்கூடிய பெரியவர்கள் எளிதில் ஜீரணமாகி விடுவதால் பயமில்லாமல் எத்தனை சப்பாத்தி வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …