கனடாவில் பிறந்த சன்னி லியோனின் மிரட்டும் ஓ மை கோஸ்ட் [OMG] பட டீசர் வெளியீடு!

 

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான சன்னி லியோனி  நடித்த ஓ மை கோஸ்ட் தமிழ் பட டீசர்  வெளியிடப்பட்டது. வடகறி படத்தில் ஜெய்யுடன் இணைந்து ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார்.

பின்னர் அமெரிக்காவில்  டேனியலை என்பவரை திருமணம் செய்துகொண்டு இரட்டை பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்கிறார். மேலும் ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.

 வரும் நவம்பர் மாதத்தில் வெளிவரக்கூடிய இந்த படமானது மிகவும் தீரில்லாக இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் இந்த படத்தில்  சதீஷ், யோகி பாபு ,தர்ஷா குப்தா,  ரமேஷ் திலக்,மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, போன்றோர் நடித்திருக்கிறார்கள்.ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை யுவன் எழுதி இயக்கியுள்ளார்.இப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் ஒரு பேய் படமாகும். இது திகில், நகைச்சுவை கலந்தது.

 மேலும் இந்த படத்தில் மூன்றுவித கெட்டப்பில் சன்னி லியோன் நடித்திருக்கிறார். அனைவரையும் மிரட்டும் வகையில் இந்த படம் இருக்கும் என்று அறியப்படுகிறது.

தன்னுடைய கவர்ச்சியால் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள சன்னி லியோன் தற்போது சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த படத்தில் டிக் டாக் புகழ்  ஜிபி முத்துவும் நடித்த காமெடிகள் கலக்கியிருக்கிறார். பாலிவுட்டில் வெறும் கவர்ச்சி நடிகையாக இருந்த இவர் என்ற பேய் படத்தில் மிகவும் ஆக்ஷன் நிறைந்த  பாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும்  எதிர்பார்ப்பை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில்,மாயசேனாவை நீ பார்த்து இருக்கிறாயா என யோகிபாபுவின் குரலில் டீசர் தொடங்குகிறது.

இந்த டீசரை பார்த்து அனைவரும் திரண்டு வருகிறார்கள் படம் வெளிவரும்போது படம் மிகவும் திகிலாக இருக்கும் என்பது அனைவரும் கருத்தாக இருக்கிறது மிரட்ட கூடிய வகையில் தான்  சன்னி லியோனின் கதாபாத்திரம் இருக்கும் என்று தோன்றுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …