“சுறுசுறுவென சுறுசுறுப்பை தூண்டும்..!” – வெங்காய தேங்காய் சட்னி..!

தேங்காய் சட்னி உங்கள் வீட்டில் அரைத்து நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த தேங்காய் சட்னிக்கு சட்னி கடலையோடு, தேங்காய் சேர்த்து அரைத்து தருவார்கள். ஆனால் டிஃபரண்டான இந்த வெங்காய தேங்காய் சட்னியில் தேங்காய் உடன் பச்சை வெங்காயத்தை சேர்த்து அரைப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதோடு உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்கிறது.

 அப்படிப்பட்ட சுவையான சுறுசுறுப்பை தூண்டக்கூடிய வெங்காய தேங்காய் சட்னியை எப்படி செய்வது என்பது பற்றி இப்போது விளக்கமாக பார்க்கலாம்.

வெங்காய தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.தேங்காய் துருவியது அரை கப்

2.சின்ன வெங்காயம் உரித்தது 10

3.வரமிளகாய் 3

4.உப்பு தேவையான அளவு

5.பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

6.பூண்டு பச்சையாக இரண்டு பல்

செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை தோலை நீக்கி நல்ல முறையில் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேங்காயை உடைத்து அந்த தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 பின்னர் எந்த தேங்காய் துருவலையும் உரித்து வைத்திருக்கும் வெங்காயத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டுக்கொண்டு தேவையான அளவு உப்பு வர மிளகாய், பூண்டு பல் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து இந்த ஜாரை நீங்கள் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். பிறகு சிறிதளவு நீரை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சட்னிக்கு தேவை எனில் தாளிசம் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் அப்படியே எடுத்துக் கொண்டாலும் சுவை அலாதியாக இருக்கும்.

 மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் அந்த சட்னிக் கலவையை வேறொரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த சட்னியை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் இதை அடித்துக் கொள்ள வேறொன்றும் இல்லை என்று நீங்கள் கூறுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …