“ஆரோக்கியமான ஆனியன், கீரை பக்கோடா..!” – மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் கிரிஸ்பி பக்கோடாவின் சீக்ரெட்..!!

குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய மாலை நேர குறுந்தீனியாக திகழும் ஆரோக்கியமான இந்த ஆனியன், கீரை பக்கோடாவை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

இந்த பக்கோடாவில் நீங்கள் முருங்கைக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை  மூன்றையும் பயன்படுத்தலாம்.

இந்த ஊட்டச்சத்து மிக்க பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

1.கடலை மாவு 200 கிராம்

2.50 கிராம் அரிசி மாவு

3.முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி

4.அரைக்கீரை ஒரு கைப்பிடி

5.வல்லாரைக் கீரை அரை கைப்பிடி

6.பெரிய வெங்காயம் இரண்டு

7.உப்பு

8.மிளகாய் பொடி

செய்முறை

 முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் எடுத்து கட்டி சேராமல் சிறிதளவு நீரை தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். இதனோடு மூன்று கீரைகளையும் நன்கு நறுக்கி அதில் போட்டு  உதிர் உதிராக மாவோடு இணைந்து வரக்கூடிய பக்குவத்தில் நன்கு பிரட்டி நீரை தெளித்து பிசைந்து எடுக்கவும்.

 இதனை அடுத்து தேவையான அளவு உப்பு, காரத்திற்காக மிளகாய் தூள், வெங்காயம் இது மூன்றையும் போட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள்.

 இதனை அடுத்து வாணலியில் இதனைப் பொறித்து எடுக்க தேவையான அளவு எண்ணெயை விட்டு என்னை நன்கு சூடேறியவுடன் இந்தக் கலவையை பக்கோடா பதத்திற்கு நன்கு பிரட்டி உதிர் உதிராக எண்ணெயில் போடவும்.

 இப்போது சூடான சுவையான குழந்தைகள் விரும்பும் கிரிஸ்பி வெங்காய கீரை பக்கோடா ரெடி. இந்த பக்கோடாவில் கீரை வகைகளை சேர்த்து இருப்பதால் அவர்களின் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் வல்லாரைக் கீரையை கொடுப்பதால் ஞாபக சக்தியும் கிடைக்கும்.

குறிப்பு

இந்த பக்கோடா எண்ணெய் குடிக்காமல் இருக்க வேண்டுமென்றால் ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு நீங்கள் மைதா மாவை கலந்து கொள்ளலாம். இதை  மூலம் உங்களுக்கு அதிக அளவு எண்ணெயை குடிக்காது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …