ஆஸ்கர் விருதுக்கு RRR தேர்வு மறுக்கப்பட்டதா..? அதிருப்தியில் ரசிகர்கள்..!

உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கார் விருதாகும்.இது அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் தேர்வாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்லாது ஆர்ஆர்ஆர் திரைப்பட குழுவும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இத்திரைப்படம் தேர்வாகாமல் குஜராத் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இதை சிறிதும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால் இப்படக் குழுவினர் அப்படியே விடாமல் மீண்டும் முயற்சித்து பொதுப்பிரிவில் பதிவு செய்து பல பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் போட்டியிடுகிறது.

சிறந்த மோஷன் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் போன்ற அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.

1920 களில் தெலுங்கு பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய இருவரின் உண்மை கதையை மையமாகக் உருவாக்கப்பட்ட திரைப்படமே இது.

இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கி இருந்தார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் சில கற்பனைகளை புகுத்தியே ரசிகர்களுக்கு விருந்தாக படைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் அஜய் தேவ்கன் சில காட்சிகளுக்கே வந்தாலும் அழுத்தமான நடிப்பை பதித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள், பின்னணி இசை என்ற அனைத்திலும் சிறந்த கவனம் செலுத்தி இருந்தார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் ஆஸ்கர் விருத்திக்குள் நுழைந்துள்ள இத்திரைப்படம் விருதினை வெல்லுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …