விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு துவங்கிய இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி, கொரோனா பரவல் காலத்திலும் போதிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடத்தப்பட்டத என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த 7 ஆண்டுகளில், அவர் பங்கேற்க வேண்டிய சீசன் நாட்களில் 2 முறை மட்டுமே, கமலுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று வழிநடத்தினார். ஏனெனில் அப்போது நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனினும் அடுத்த 3வது வாரமே, கமல்ஹாசன் மீண்டும் வந்துவிட்டார்.
பிக்பாஸ் ஓவியா
அப்படிப்பட்ட பிரபலமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், 7 சீசன்களிலும் ஏராளமான ஆண், பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆனால் ஒருவருக்கு மட்டுமே, ரசிகர்கள் ஆதரவாக இருந்து ஓவியா ஆர்மி என ஆரம்பித்து அவருக்கு பயங்கரமாக சப்போர்ட் செய்தனர் என்றால், அந்தளவுக்கு அவர் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்தார்.
இதையும் படியுங்கள்: அம்மாடியோவ்.. கீழ ஒண்ணுமே போடல.. அநியாய கவர்ச்சியில் சாந்தினி தமிழரசன்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 2017ம் ஆண்டில் முதல் சீசனில் பங்கேற்றார் நடிகை ஓவியா. இந்த சீசனின் நடிகர் கல்யாண் வெங்கட்ராமன், கவிஞர் சினேகன், நடிகர் ஆரவ், ஜூலி, காயத்ரி ரகுராம் என பல பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார்.
குறும்படம் புகழ்
இந்த நிகழ்ச்சியில், ஒரு விஷயத்தில் ஜூலி பேசிய பொய்யை நிரூபிக்க, ஓவியா உண்மையாக தான் நடந்துக்கொண்டார் என்பதை தெளிவுபடுத்த குறும்படம் காட்டப்பட்டது. அதன்பிறகு நேர்மையாக நடந்துக்கொண்ட ஓவியாவுக்காக குறும்படம் புகழில் உருவானதுதான் ஓவியா ஆர்மி. ஜூலி அதில் மிகவும் அசிங்கப்பட்டு போனார்.
மெரினா படத்தில் அறிமுகமான ஓவியா, களவாணி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மனம் கவர்ந்தார். தொடர்ந்து ஓவியா. முத்துக்கு முத்தாக, புலிவால், மூடர் கூடம், மதயானை கூட்டம், கலகலப்பு, களவாணி 2, சண்ட மாருதம், காஞ்சனா 3 என பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இரட்டை நாயகர் படங்களில் ஒருவருக்கு ஓவியா ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: இதுக்கு ஆசைப்பட்டு அவனுக்கு 4வது பொண்டாட்டியா போயிட்டா.. பவித்ராவை கழுவி ஊத்தும் முன்னாள் கணவர்..!
அடையாளமே தெரியாத அளவுக்கு..
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஓவியாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நல்ல உடல் தோற்றத்துடன் சற்று பூசிய சதைப்பிடிப்பான உடல் கவர்ச்சியுடன் காணப்பட்ட ஓவியா, இப்போது மிகவும் மெலிந்து போய், உடம்பெல்லாம் வற்றிய நிலையில், ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார். இந்த திடீர் உடல் மாற்றத்துக்கு காரணம் என்னவென்று தெரியாமல் அவரது ரசிகர்கள் புலம்பி தீர்க்கின்றனர்.
விகாரமாக மாறிட்டாரே…
அய்யோ நம்ம பிக்பாஸ் ஓவியாவா இது..? என்ன இப்படி உடல் மெலிந்து விகாரமாக மாறிட்டாரே.. என்று அந்த புகைப்படங்களை பார்த்த ஓவியா ஆர்மி ரசிகர்கள் புலம்பி தீர்க்கின்றனர். வைரலாகும் ஓவியாவின் புகைப்படங்களை பார்க்கும் பலரும் உச்சுக் கொட்டி தங்களது அங்கலாய்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.