விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ஓவியா. தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புத்தனங்கள் ஆகியவை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய புகழுக்கு காரணம் வீரத்தமிழச்சி என்று பலராலும் அறியப்பட்ட ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஓவியா செய்யாத ஒன்றை அவர் செய்தார் என்று பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் புறணி பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
பிக் பாஸ் ஜூலி அந்தஸ்தை தற்பொழுதும் அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறது. இந்த சர்ச்சையில் நடிகை ஓவியா எந்த தவறும் செய்யவில்லை என்று தெரியவரவே ரசிகர்களின் கவனம் ஒட்டு மொத்தமாக நடிகை ஓவியாவின் மீது குவிந்தது.
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் கிடுகிடுவென உயர்ந்தது. ஆரம்பத்தில் திரைப் படங்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகை ஓவியா ஒருகட்டத்தில் படுமோசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
அதிலும் குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் நடித்த ஒரு திரைப்படம் ரசிகர்களை அதிர வைத்தது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனது காதல் குறித்து பேசிய ஓவியா காதல் தோல்வி என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது.
ஒரு பேருந்து போய்விட்டால் இன்னொரு பேருந்து வரும். நீங்கள் எப்போதும் அன்போடு எல்லோரிடமும் பழகுங்கள் சரியான அவர்கள் சரியான நேரத்தில் வருவார்கள் என சாதாரணமான ஒரு பதிலைக் கூறி இருக்கிறார். இவருடைய இந்த பதிலுக்கு ரசிகர்கள் சிலர் எதிர்ப்பும் சிலர் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.