பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரான பி. வாசு தற்போது கவுண்டமணி பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை கூறி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர்கள் நடிகைக்கோ, நடிகருக்கோ படத்திற்கான முழு தொகையும் கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அட்வான்ஸ் ஆக கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
எனவே அட்வான்ஸ் தொகையை கொடுப்பதற்காக அவர்கள் வெளியில் கடன் வாங்கி கொடுப்பார்கள். குறைந்தது ஆறு மாசத்துக்கு முன்பே புக் செய்யப்படக்கூடிய நடிகர்களுக்கு இதுபோன்ற தொகையை கொடுப்பதால் வட்டிக்கு மேல் வட்டி வந்து குட்டி போட்டு இவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரிய நிலையாக மாறி பல தயாரிப்பாளர்கள் சினிமா பீல்டை விட்டு தெறிக்க ஓடிய சம்பவங்களும் எரிச்சல் உள்ளது.
அவர்கள் எடுக்கும் படம் வெற்றியை தந்தால் பரவாயில்லை.அதேசமயம் ஊத்திக் கொண்டால் நினைத்துப் பாருங்கள். இந்த சூழ்நிலையை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்பது போல் நடந்து கொண்ட தமிழ் நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள்.
அவர்களில் மிகவும் முக்கியமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வைத்து இயக்குனர் வாசு சந்திரமுகி சிவாஜி உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார் அதிக பட்ஜெட்டில் அந்த படம் எடுக்கப்படுவதால் தயாரிப்பாளர்களிடம் வெறும் ஒரு ரூபாயை மட்டும் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு ரஜினிகாந்த் நடித்தார்.
மேலும் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற பிறகு தான் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டார். இவரைப் போலவே இன்னொருவர் நகைச்சுவை நாயகன் என்று அனைவராலும் இன்றுவரை போற்றப்படக்கூடிய நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை கூறலாம்.
இவர் எந்த ஒரு படத்தில் கமிட் ஆனாலும் ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கியவர். ஆனால் அட்வான்ஸாக ஒரு ரூபாய் மட்டும் தான் வாங்கிக் கொண்டு நடிப்பார். தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தை நன்கு உணர்ந்து படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் சம்பளத்தை முழுசாக பெற்றுக் கொள்வார்.
கவுண்டமணி அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனினும் தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுப்பார்கள் என்ற பெரும் தன்மையால் அவர் எப்படி நடந்து கொண்டார் என பி வாசு மிகவும் நெகிழ்ச்சியாக இந்த சம்பவத்தை தற்போது கூறி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டார் என கூறலாம்.