லோகேஷ் கனகராஜ் ஆசான் படத்தின் காப்பிதான்  தங்கலான் படம்.. பா.ரஞ்சித்தே கொடுத்த தகவல்..!

சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க தற்சமயம் அதிக பிரபலமாகி வரும் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

தற்சமயம் அமெரிக்காவிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படமாக தங்கலான் திரைப்படம் இருந்து வருகிறது. ஏனெனில் படத்தின் உருவாக்கம் அந்த அளவிற்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பழங்குடியின மக்களை நேரில் கொண்டு வந்த அளவிற்கு படத்தில் காட்சிப்படுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

தங்கலான் படம்

விக்ரம் கூட இந்த திரைப்படம் குறித்து பேட்டியில் கூறும் பொழுது இதுவரை நான் கஷ்டப்பட்ட படங்களிலேயே தங்கலான் பட அளவு எந்த படத்திற்கும் கஷ்டப்படவில்லை என்று கூறியிருந்தார். இதுவே அதிக எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் படத்தில் வசனங்கள் கூட பழங்குடி இன மக்கள் பேசி இருந்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியே வைத்திருந்தது. படத்திற்கு இன்னும் பெரிய நேர்மறையான விஷயமாக அமைந்தது. பெரும்பாலும் படத்தை பார்க்கும் பலரும் இந்த படத்தை புகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆசான் படத்தின் காப்பிதான்

ஆனால் சிலர் இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர். அடிமைத்தனத்திற்கு எதிரான பல விஷயங்களையும் இந்த படத்தில் பேசி இருக்கிறார். அந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் விக்ரம் கோவணம் கட்டிக்கொண்டு வந்தாலும் கூட சில காட்சிகள் கடந்த பின்னர் விக்ரம் நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு குதிரையில் செல்வது போன்ற காட்சிகள் இருக்கும்.

இது குறித்து பேட்டியில் கூறும்பொழுது ரஞ்சித் ஒரு விஷயத்தை கூறியிருந்தார் ஜாங்கோ என்கிற ஹாலிவுட் படத்தை பார்த்துதான் அந்த காட்சியை நான் படத்தில் வைத்தேன். ஜாங்கோ ஆரம்பத்தில் கருப்பின மக்களாக அடிமையாக இருந்து வருவான்.

பா.ரஞ்சித்தே கொடுத்த தகவல்

ஆனால் பிறகு அவனே நல்ல ஆடைகளை உடுத்தி குதிரையில் வருவான் ஒரு கருப்பர் குதிரையில் வருவது என்பது அப்போதைய காலகட்டத்தில் வியப்புக்குரிய விஷயம் என்பதால் கீழ் இருக்கும் வெள்ளையர்கள் அனைவரும் அண்ணாந்து அவனை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.

அந்த காட்சி எனது மனதிலேயே நின்று கொண்டிருந்தது. அதை தங்கலான் படத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்தேன் எனவேதான் அப்படியான ஒரு காட்சியை வைத்தேன் என்று கூறுகிறார். திரைப்படமும் அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் அடிமைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தை ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவாண்டின் டொரண்டினோ இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. குவாண்டின் டொரண்டினோ லோகேஷ் கனகராஜின் மானசீக குரு ஆவார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version