பாளையத்து அம்மன் படத்துல நடிச்ச பாப்பாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

பாளையத்தும்மன் என்ற பக்தி திரைப்படமானது 2000-வது ஆண்டில் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராமநாராயணன் இயக்கியிருந்தார். இதில் பாளையத்து அம்மன் வேடத்தில் நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

மேலும் இந்த படத்தில் ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்த விவேக்கின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்டது.

பாளையத்து அம்மன் படத்துல நடிச்ச பாப்பா..

மக்கள் மத்தியில் வெற்றி படங்களில் ஒன்றாக ஓடிய பாளையத்து அம்மன் படம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தீய சக்திகளை அழிப்பதற்காக பாளையத்து அம்மன் மனிதப் பிறவியில் தோன்றி தீமையை அடிக்கக்கூடிய வகையில் இந்த படத்தின் கதை போக்கு அமைந்திருந்தது.

அதிலும் குழந்தை ஒன்றுக்கு சாத்தானிடமிருந்து ஏற்படுகின்ற தீமைகளை காத்து நிற்கும் தெய்வமாக பாளையத்து அம்மன் விளக்குவார். இதனை அடுத்து தன் குழந்தையை பாளையத்தம்மன் எடுத்துச் சென்று விடுவாளோ என்ற பயத்தில் திவ்யா உன்னி அம்மனிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

மேலும் தீய சக்தி இடம் இருந்து குழந்தையை காப்பாற்றக்கூடிய பாளையத்தம்மன் எப்படி சாத்தான் அசுரேஸ்வரனை கொன்று குழந்தையை அசுரனிடம் காப்பாற்றுகிறார் என்பது தான் முக்கிய கதையாகும்.

அப்படிப்பட்ட இந்த படத்தில் குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரமான அக்ஷயா ஜெயராம் அண்மையில் தந்த பேட்டி பற்றியும் அவர் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

அண்மை பேட்டி ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்த அக்ஷயா ஜெயராமன் தற்போது வளர்ந்த நிலையில் தந்திருக்கும் பேட்டியில் பாளையத்து அம்மன் படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களை ஷேர் செய்து இருக்கிறார்.

இதில் அந்தப் படத்தில் வரும் ஜண்டா என்கிற மந்திரத்தை கேட்டாலே ஓடி ஒளிந்து கொண்டு வீட்டுக் கதவை மூடி வைத்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருந்தேன் என்று சொன்னார்.

மேலும் பொம்மை பாம்பினை நடிப்பதற்கு முன்பு காட்டியவர்கள் ஷூட்டிங்கில் நிஜ பாம்பை வைத்து பயமுறுத்திய விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் சினிமா பட உலகை விட்டு போ காரணம் தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து பள்ளிக்கு அதிக அளவு செல்ல முடியாமல் அதிக ஆப்சென்டீஸ் என்ற பெயர் கிடைத்ததை அடுத்து படிப்பில் கவனத்தை செலுத்துவதற்காக தான் சினிமாவில் இருந்து விலகிப் போய் இருப்பதாக சொன்னார்.

ஜண்டா சொல்லிய வண்ணம் அந்த அசுரன் வரக்கூடிய சீன் எல்லாமே இரவில் தான் எடுக்கப்பட்டது. மேலும் சினிமாவிற்கு நான் வந்தது ஒரு எதார்த்தமான விஷயம் தான் ஆரம்ப நாட்களில் கேமரா பியர் எனக்கு இருந்ததில்லை நான் செல்ல செல்ல அதாவது ஏழு வயதுக்கு மேல் தான் எப்படி என்று நினைக்கவே தோன்றியது என்பதை பகிர்ந்தார்.

இதை அடுத்து இவரது அண்மை புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வைரலாக உள்ளது.

வைரல் போட்டோஸ்..

இந்த வைரல் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வேகமாக பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையா நீங்க என்று கேட்கவும் வைத்து விட்டது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் சிலர் அக்ஷயா ஜெயராம் எப்படி இருக்காங்க என பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவர். ஹீரோயினிக்கு உரிய அத்துணை அம்சங்களையும் பெற்றிருப்பத திரைப்படங்களில் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்வியும் வைத்திருக்கிறார்கள்.

இதனைஅடுத்து இதற்குரிய பதிலை அக்ஷயா ஜெயராம் கொடுப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும். அப்படி நடிக்க இவர் வந்தால் நிச்சயமாக இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாவதோடு இவருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version