சினிமா எதுக்கு.. சீரியலில் நடிக்கவே அதை பண்ணனும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பரபரப்பு தகவல்..!

Casting Couch பிரச்சனையானது இன்று உலக அளவில் பேசும் பொருளாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் மீது பல்வேறு வகையான புகார்களை கிளப்பியுள்ளது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதை அள்ளி சென்று இருக்கும் பாண்டியன் ஸ்டோர் மூன்றாவது முறையாக நடித்து ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் வீட்டில் ஒரு பெண்ணாகவே இருக்கும் லாவண்யா சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையைப் பற்றி விளக்கி இருக்கிறார்.

நடிகை லாவண்யா..

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எதிர வைக்கக் கூடிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது முல்லையாக நடித்து வரும் லாவண்யா தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை குறித்து அண்மை பேட்டியில் மன வேதனையோடு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் திரை உலகை பொருத்த வரை இன்று மீடு புகார்கள் அதிகரித்து இருந்தாலும் சிக்கல் இல்லாமல் எந்த அட்ஜஸ்மெண்டுகளை எப்படி திருட்டுத்தனமாக அரங்கேற்றலாம் என்பது பற்றி பல்வேறு விஷயங்கள் திரை மறைவில் நடப்பதை பிரபல நடிகைகளும் நடிகர்களும் ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தாண்டி சீரியலில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக உடைத்திருக்கும் நடிகை லாவண்யா சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய டார்ச்சர் பண்ணாங்க..

இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி பல்வேறு வகைகளில் டார்ச்சர் செய்ததாக சொல்லி இருக்கிறார்.

டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எல்லாம் எழுதி நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்திருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

எனினும் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் சீரியலில் நடிக்கலாம் என்று நினைத்த இவருக்கு இது போன்ற டார்ச்சர் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்.

திறமைக்கு வாய்ப்பு..

மேலும் திறமைக்கு வாய்ப்பு கிடைப்பது என்பதெல்லாம் குதிரை கொம்பாக மாறி விட்ட நிலையில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் தமக்கு செட்டாகாது என்று ஒதுங்கி இருந்தபோது தான் என் திறமையை பார்த்து வாய்ப்புக் கொடுத்தார்கள்.

சிப்பிக்குள் முத்து சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு திறமையால் மட்டும் தான் கிடைத்தது.

மேலும் சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் பலரும் அட்ஜஸ்மென்ட் செய்து தான் தற்போது நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

பல நடிகைகள் குறுக்கு வழியில் போகாமல் நேர்வழியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பினால் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களை தடுக்கலாம்.

இப்படி லாவண்யா பேசிய விசயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை எண்ணி அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ஒவ்வொருவரும் திறமையை நம்பி அதற்கு உடன்படாமல் இருந்தால் மட்டும் தான் இது போன்ற அவலத்தை திரைத்துறையில் மட்டுமல்லாமல் ஏனைய துறையில் இருந்து சீக்கிரமாக அகற்ற முடியும் என்பதில் உண்மை உள்ளதாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version