14 வயது சிறுவர்களால் பாலியல் தொல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை புகார்..!

ஹிந்தியில் ரீமேக் ஆகி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சிம்ரன் புதரூப்.

பாலிவுட்டில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது கூறியுள்ள புகார் ஒன்று சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை சிம்ரன் கூறியதாவது, நான் சீரியலில் வில்லியாக நடிப்பது சிலரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை நான் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவற்றை நான் கண்டுகொள்ளாமல் கடந்து வருவது உண்டு. இப்படியான எதிர்ப்புகள் அனைத்தும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் தான் என்பதை நினைத்து சில நேரங்களில் நான் பெருமை பட்டுள்ளேன்.

ஆனால், இப்படி வரக்கூடிய விமர்சனங்கள் தற்போது எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது. என்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்போவதாகவும், கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல்கள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

என்னைப் பற்றி பலரும் சமூக வலைதளங்களில் அவதூராக பேசுகின்றனர். இது எனக்கு ஒரு விதமான பயத்தை கொடுத்துள்ளது. இதனால் காவல் நிலையத்தில் நேரில் சென்று நான் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு மிரட்டல் விடுபவர்கள் பெரிய மனிதர்கள் யாரும் கிடையாது. வெறும் 14 வயதே ஆன சிறுவர்கள் தான். 14 வயதில் இருக்கும் இவர்கள் என்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்வேன் என்றும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவது என்ன விதமான மனநிலை என்று புரியவில்லை.

பெற்றோர்கள் அவர்களுக்கு படிப்பதற்காக வாங்கி கொடுத்த செல்போனை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். இப்படியான சிறுவர்களை அவரது பெற்றோர் முறையாக கண்காணித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

14 வயதான சிறுவர்கள் சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை செய்வோம் என்று மிரட்டிய இந்த விஷயம் பாலிவுட் மீடியாக்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …