பிரபல பத்திரிக்கையாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி மோசமான கெட்ட வார்த்தையை நினைத்து இணையத்தில் வெளியிட்ட திமுக இணையதள பிரிவு பிரமுகர் மீது புகார் கூறியிருப்பது பரபரப்பை கிளம்பி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் திரு கருணாநிதி அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவருக்கு மிகவும் பிடித்த அவர் அன்றாடம் பயன்படுத்திய ஒரு பொருளான பேனா சிலை ஒன்றை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வந்து பார்க்கும் படியான வசதியுடன் இந்த பேனா சின்னம் நிறுவப்பட இருக்கிறது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சண்டை சலசலப்பு என பெரும் களேபரத்துடன் இந்த கருத்து கேட்பது கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் பேசும்பொழுது இந்த பேனாவை கடலில் அமைப்பதால் கடலை ஒட்டி இருக்கக்கூடிய 13 கிராமங்கள் பாதிக்கப்படும்.
பவளப்பாறைகள் பாதிக்கப்படும்.. பவளப்பாறைகள் மட்டும் இல்லாமல் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படும். பள்ளிகளை புதுபிக்க நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.. பேனா சிலை வைக்க எங்க இருந்து காசு வருது.. கடல் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல குறிப்பாக திமுக குடும்பத்திற்கானது அல்ல என்று காரசாரமான விவாதத்தை எழுப்பினார்.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. தான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திமுகவினர் கோஷம் போட்டு குறிப்பிட்டதால் கோபமடைந்த சீமான் என்னை மீறி கடலில் நீங்கள் பேனா சிலையை வைத்து பாருங்கள். அதை உடைக்கிறேனா இல்லையா என்று பாருங்கள் என்று பேசியிருந்தார்.
இதனை கலாய்க்கும் விதமாக திமுக இணைய பிரிவை சேர்ந்த ஒரு நபர் பிரபல பத்திரிகையாளர் பனிமலர் பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை கொச்சையான கெட்ட வார்த்தை உடன் இணைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணிமலர் பன்னீர்செல்வம் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி இப்படி மோசமான வார்த்தையை வெளியிடுவது சரியானது கிடையாது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் இருக்கக்கூடிய காவல் துறை ஹேண்டிலை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது