என் இரண்டாம் காதலன் தந்த அந்த வலி..! வெளிப்படையாக கூறிய பனிமலர் பன்னீர்செல்வம்..!

வாழ்க்கை என்பது துன்பங்களும், துயரங்களும், பிரிவுகளும், வலிகளும் நிறைந்ததாக தான் இருக்கின்றன. இதில் சாதாரண மனிதர்களும், சரித்திர மனிதர்களும் யாராக இருந்தாலும், வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்வது தவிர வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை.

மிக பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் பல விதங்களில் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு வலி களை சந்தித்தவர்களாக, கசப்பான அனுபவங்களை கடந்து வந்தவர்களாக தான் இருக்கின்றனர்.

பனிமலர் பன்னீர்செல்வம்

பிரபல செய்தி தொகுப்பாளர், யூடியூப்பர் பனிமலர் பன்னீர்செல்வம் சமீபத்தில் சில விஷயங்களை, தனதுகசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பனிமலர் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது, பள்ளி பருவத்திலேயே சக மாணவர்கள், சக மாணவிகள் இருதரப்பினர் மீது ஒருவருக்கு ஒருவர் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். அந்த ஈர்ப்பு என்பது சகஜமானது.

ஆனால் அடுத்தடுத்த காலகட்டங்களில், அந்த ஈர்ப்பின் தன்மையும், வீரியமும் தானாகவே குறைந்து விடும். அதற்குப் பிறகு அதை மறைந்தே போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாய காதல் எனக்கும் வந்தது

இந்த மாதிரி இளம் வயதில் வரக்கூடிய இன கவர்ச்சி என்கிற மாய காதல், எனக்கும் அந்த வயதில் வந்தது. ஊரை விட்டு சென்னைக்கு வந்த போது, நீண்ட நாட்களாக என்னுடன் பயணித்த நண்பர் ஒருவரை வாழ்க்கை துணையாக்கிக் கொள்ள நான் ஒரு முடிவு செய்தேன்.

ஆனால், அந்த உறவு ஒரு கட்டத்தில் முறிந்து போனது. ஆனால் இந்த விஷயத்தில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் காதலித்தவர் தான் பிரச்சனையை தவிர, காதலுடன் எனக்கு எப்போதும் பிரச்சினை இல்லை.

இதையும் படியுங்கள்: ப்பா.. இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. மாடர்ன் உடையில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

ஐந்து ஆண்டுகள் நீடித்த காதல்

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது எனக்கு ஏற்பட்ட காதல், ஐந்து ஆண்டுகள் வரையே நீடித்தது. இந்த காதல் தான் எனக்கு நிறைய வலியை கொடுத்தது. நிறைய காயங்களை ஏற்படுத்தியது. அந்த காயங்களின் வடுக்கள் இன்னும் இருக்கின்றன.

இதனால் வாழ்க்கை வெறுத்து போய், ஒரு காலகட்டத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்தேன். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவேன். துக்கத்தால் தூக்கம் கூட போய்விட்டது. என் மன அழுத்தத்தை பார்த்து, எனக்கே பயம் வந்துவிட்டது. மனநல மருத்துவர் சந்திக்கும் நிலைக்கு ஆளானேன்.

புதிய மனுஷியாக..

பிறகு உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்து புதிய மனுஷியாக நான் மீண்டும் பிறந்தேன். எந்த காதலையும் நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.

காதலில் தோற்றுவிட்டால் முடங்கிப் போய் விடக்கூடாது. அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் பயணிக்க வேண்டும். இதன் மூலமாக தான் உங்களை மீட்க முடியும். அந்த பிரிவின் துயரில் சிக்காமல், அடுத்த திட்டங்களை மேற்கொள்ளும் போது காயங்கள் மறைந்து போகும்.

இதையும் படியுங்கள்: ஸ்லீவ்லெஸ் உடையில் டாப் ஆங்கிளில் அது தெரிய சீரியல் நடிகை தமிழ்செல்வி.. வியப்பில் ரசிகர்கள்..!

உண்மையான காதல்

என்னுடைய முன்னாள் காதலலுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவருக்கு குழந்தைகள், குடும்பம் என்று ஆன பின்பு கூட நட்பு ரீதியாக பேசுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. உணர்வுகளை மதிப்பது தானே உண்மையான காதல் என்று பேசி இருக்கிறார் பனிமலர் பன்னீர்செல்வம்.

தன் இரண்டாம் காதலன் தந்த அந்த வலியை வெளிப்படையாக கூறியிருக்கிறார் பனிமலர் பன்னீர்செல்வம். இது ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version