தமிழ் தொலைக்காட்சிகளில் பல பெண் செய்தி வாசிப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி அதன் பின்னர் சீரியல்கள் சினிமாக்களில் நடிக்க தொடங்கி இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்கள் .
அந்த லிஸ்டில் பிரியா பவானிசங்கர், அனிதா சம்பத் போன்றவர்களை தொடர்ந்து பிரபலமான செய்தி வாசிப்பாளியாக இடத்தைப் பிடித்தவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம்.
செய்தி வாசிப்பாளினி பனிமலர்:
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த பனிமலர் ஃபேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். ஆனால் அவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிருந்தார் பனிமலர். குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்சானம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இதன் மூலமாக பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அது தவிர சோசியல் மீடியாக்களிலும் படு ஆக்ட்டிவாக அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இவர் இதுவரை சன் டிவி, பாலிமர் டிவி, புதிய தலைமுறை உள்ளிட்ட பல்வேறு பிரபலமான சேனல்களில் வேலை பார்த்திருக்கிறார்.
குழந்தை இல்லாமல் வேதனை:
இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகியும் பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது மனரீதியாக அவரை பாதித்திருந்தது.
இதனிடையே தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம்.
அவர் செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் அழகு கலை நிபுணராகவும் ஆடை அலங்கார நிபுணராகவும் அறியப்படும் இவர் தான் கர்ப்பமாக இருப்பதை சில விலங்குகளும் முன்பாக அறிவித்தார்.
மேலும், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த பனிமலர்… ” டார்லிங்ஸ், தவமாய் தவமிருந்து நான் அம்மா ஆகப்போறேன் என கேப்ஷன் கொடுத்து, சீக்கிரம் 2 பாப்பா பெத்துக்கணும்…ல ஆரம்பிச்சு,
பாப்பா பெத்துக்கணும்…பாப்பா எப்பதான் பெத்துக்குறது? பாப்பாவே பொறக்காதா? நமக்கு அம்மா ஆகுற தகுதி இல்லையா?
மத்த மாசமா இருக்குற பெண்களை, குட்டிக் குழந்தைகளைப் பாத்தாலே(சத்தியமா மிகைப்படுத்தல social media ல பாத்தாலே) அழுகை வந்துடும்.
உணர்ச்சிபூர்வமான பதிவு:
பாப்பாவே வேண்டாம்… நமக்கு பாப்பாவே பொறக்காது…ல வந்து நின்னுடுச்சு மனசு. என்ன நானே சமாதானப்படுத்திக்கத்தான் ராக்கி, மோனா அவுங்ககிட்ட அம்மா அம்மானு சொல்லும்போதும், அவுங்க என்ன தேடும்போதும், கொஞ்சும்போது ஒரு அற்ப சந்தோசம் என் புள்ளைகனு, நானும் ஒரு அம்மாதான்னு.
அவ்ளோதான் இப்டியே உள்ளதவச்சு சந்தோசப்பட்டுகணும்னு எல்லாதுல இருந்தும் விலகி நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருக்கும்போது எல்லாமே தலைகீழா மாறுச்சு, நினைக்காத விசயங்கள் எல்லாம் நடந்துச்சு.
குழந்தைக்கு முயற்சிக்கும்போதும் 1% நம்பிக்கைகூட இல்ல, எனக்கு குழந்தை பிறக்கும்னு, இப்பவரைக்கும் முழுமைய நம்பமுடியல இது கனவா, நிஜமா நடக்குதானு.
Scan-ல பாப்பாவோட இதயத்துடிப்ப கேக்கும்போதெல்லாம் கதறி அழுவேன், அதுக்காகவே ரொம்ப நேரம் காட்டுவாங்க. அப்ப மட்டும் உண்மைதான்போலனு தோணும்.
ஆரம்பத்துல இருந்து பாக்குறவுங்களுக்கு தெரியும் என் வாழ்க்கை எப்பயும் சுலபமானதா இல்ல, அது அடிச்ச அடிலதான் நான் இந்த நிலமைல இருக்கேன், இப்பவும் எவ்ளவோ பாரங்களோடதான் இந்த பயணத்தை தொடர்ந்துட்டிருக்கேன்.
அத்தனை சூழல்களயும் என்கூட இருந்த, இருக்குற, நாய்க்குட்டிகளைப் பாத்து அழும்போது ஏன்னு உணர்ந்து எனக்கு ஆறுதல் சொன்ன, u deserve to be happy னு எப்பயுமே என்ன வாழ்ந்துற, என்ன சமூக வலைதளங்கள்ல மட்டும் பாக்குற யாரோனு நினைக்காம சொந்தமா, நட்பா, உறவா நினைக்குற உங்க எல்லார்கிட்டயும் இந்த விசயத்த சொல்ல நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன்.
எனவே சத்தமா கத்தி சொல்றேன் “ I’M PREGNANT“ எனக்குள்ள ஒரு பாப்பா இருக்கு…டிசம்பர்ல நம்ம கைக்கு வந்துடும். எப்பயுமே கடவுளை நம்பாத நான் நம்புற ஒரே விசயம் positive energy என்ன சுத்தியும், பாப்பாவ சுத்தியும் இப்பயும் அது மட்டுமே இருக்கணும்னு நினைக்குறேன். உங்க அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி என மிகுந்த உணர்ச்சிவசத்துடன் பதிவிட்டிருந்தார்.
கணவரின் புகைப்படம் வைரல்:
இந்நிலையில், இவருடைய கணவர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்கிறது. ஏனென்றால் பனிமலர் பன்னீர்செல்வம் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது கணவரின் புகைப்படத்தை முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.