” வீட்டிலேயே பன்னீர் பட்டர் மசாலா..!” – பிள்ளைகள் விரும்பி சாப்பிட எப்படி செய்யுங்க..!!

பொதுவாக என்றிருக்கும் இளைய தலைமுறையில் குழந்தைகள் எல்லோருமே பன்னீர் பட்டர் மசாலா என்றால் அது உணவகங்களில் மட்டுமே கூடுதல் சுவையோடு கிடைக்கும் வீட்டில் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்க உங்கள் வீட்டிலேயே அவர்கள் நினைக்கக்கூடிய சுவையில் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வது என்று  கட்டுரையில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளுங்கள்.

 பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

1.பன்னீர் 250 கிராம்

2.நெய் 2 டீஸ்பூன்

3.வெங்காயம் ஒன்று பொடி பொடியாக நறுக்கியது

4.தக்காளி இரண்டு

5.சின்ன வெங்காயம் 15 உரித்தது

6.வர மிளகாய் இரண்டு

7.பட்டை ஒரு துண்டு

8.கிராம்பு இரண்டு

9.முந்திரிப்பருப்பு நான்கு

10.தேங்காய் துருவியது கால் கப்

11.மல்லி ஒரு டீஸ்பூன்

12.கரம் மசாலா ஒரு ஸ்பூன்

13.பன்னீர் பட்டர் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்

14.பூண்டு இஞ்சி பேஸ்ட்

15.வெண்ணெய் 25 கிராம்

16.உப்பு

செய்முறை

முதலில் பன்னீரை கடையிலிருந்து வாங்கி வந்து அதை கியூப் வடிவத்தில் சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை நெய்யை விட்டு பிரட்டிய வண்ணம் வைத்து விடுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் பிரட்டி வைத்திருக்கும் இந்த பன்னீர் ட்யூபுகளை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே வாணலியில் நீங்கள் வைத்திருக்கும் மீறி நெய்யை ஊற்றி அதில் சின்ன வெங்காயம், தக்காளி, மல்லி போன்றவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

 இந்த கலவை நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து நீங்கள் இதனை குளிர விட்டு அது குளிர்ந்த பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அதனோடு பூண்டு இஞ்சி பேஸ்ட், கிராம்பு போன்றவற்றை போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் மீண்டும் வாணலியை வைத்து அரைத்து வைத்திருக்கும் கலவையை வாணலியில் ஊற்றி விடுங்கள். பின்னர் தேவையான அளவு நீரை விடவும்.

 இது நன்கு கொதித்து வரும் போது கரம் மசாலா தூள் பன்னீர் பட்டர் மசாலா தூள் போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் நீங்கள் பொன்னிறமாக வதக்கி வைத்திருக்கக் கூடிய பன்னீர் துண்டுகளை இதனோடு சேர்த்து விடுங்கள்.

 இப்போது இந்த கலவை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வேண்டும் அப்படி கொதித்து முடித்த பிறகு நீங்கள் உப்பு தேவையானில் சேர்த்துக் கொள்ளலாம்.

 இப்போது நீங்கள் வைத்திருக்கும் வெண்ணையை அதனோடு சேர்த்து விடுங்கள் சூப்பரான சுவையான குழந்தைகள் விரும்பும் பன்னீர் பட்டர் மசாலா தயார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …