“வாவ்..! என ஆச்சரியத்தை தூண்டும் அழகு வேண்டுமா..? – ஒரே ஒரு பப்பாளி போதும்..! – வாங்க பாக்கலாம்..!

அத்திப்பழம் சிவப்பா அல்லது அத்தை மகள் சிவப்பா என்ற கேள்விக்கு  பதில் அளிக்கும் வகையில் அட இவங்க இப்படி இருந்தாங்க. இப்படி ஆயிட்டாங்களே என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நீங்கள் பப்பாளி பேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும் அழகில் ஜொலி ஜொலிப்பீர்கள் என்று கூறலாம்.

இப்போது இருக்கும் சுற்றுப்புற சூழல் மாசு காரணமாக முகத்தில் பொலிவை மிக விரைவில் நீக்கிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் சருமத்தில் இருக்கும் ஈரப்பதமும் விரைவில் இழந்து விடுவதால் சரும வறட்சி காரணமாக உங்கள் முகம் வாடி விடுவதோடு கருத்தும் விடுகிறது.

இன்னும் சில பேருக்கு அதிக அளவு எண்ணெய் வடிதல் ஏற்பட்டு அவர்களை வெறுக்கக்கூடிய மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கிறது. நீங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

உங்களுக்கு வரப் பிரசாதமாக இந்த பப்பாளி பேஸ் பேக் உள்ளது. இதை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தினாலே போதும் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

பப்பாளி ஃபேஸ் பேக் செய்யும் முறை

1.பப்பாளி பழ விழுது கால் கப்

2.தேன் அரை தேக்கரண்டி

3.எலுமிச்சை சாறு ஒரு மூடி

பப்பாளி ஃபேஸ் பேக் செய்முறை

மேற்கூறிய இந்த மூன்று கலவைகளையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும் இதன் பிறகு நீங்கள் இந்த கலவையை உங்கள் முகத்தில் நேர்த்தியான முறையில் தடவி விடவும் குறைந்தபட்சம் 10 அல்லது 20 நிமிடங்கள் வரை இந்த கலவையானது காயும் வரை நீங்கள் காத்திருக்கவும்.

 இதனை அடுத்து இந்த பேஸ் பேக் நன்கு காய்ந்து விட்டால் நீங்கள் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.

மேலும் சருமத்தில் இருக்கும் துளைகள் திறப்பதின் மூலம் ரத்த ஓட்டம் நன்றாக சருமங்களுக்குள் மூடிருச்சு ஊடுருவி செல்வதால் புத்துணர்வோடு பார்ப்பதற்கு காட்சியளிப்பீர்கள்.

இந்த பேஸ் பேக்கில் நீங்கள் தேன் சேர்த்து இருப்பது போல தேனை தவிர்த்து விட்டு ஆரஞ்சு பழத்தை சேர்த்து மற்றொரு ஃபேஸ் பேக்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த ஃபேஸ் பேக் ஆனது எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதால் எண்ணெய் சருமத்தை கொண்டிருப்பவர்கள் பப்பாளி பழம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மேற்கூறிய வழிமுறைகளை ஃபாலோ செய்து உங்கள் முகத்தில் தேய்த்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam